Wednesday, May 30, 2012

கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரிக்கை !




கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளரும்,கவுன்சிலருமான‌ முகைதீன் இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


கீழக்கரை நகரில் முக்கிய இடங்களான‌ பஸ்நிலையம்,அரசு மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ள பஸ்நிலையம் செல்லும் பகுதியில் இரண்டு மதுபான விற்பனை கடைகள் அமைந்துள்ளன.இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூராக உள்ளது.குடியிருப்பு பகுதிகள் நிறைந்து மக்கள் நடமாட்டமுள்ள இப்பகுதியில் அரசு எப்படி இக்கடைகளுக்கு அனுமதி அளித்தது என்று தெரியவில்லை.

பெண்கள் இவ்வழியே செல்வதற்கு அஞ்சும் நிலை உள்ளது.இப்பிரச்சனையை மக்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம். அரசு உடனடியாக இக்கடைகளை ஊருக்கு வெளியே மாற்ற வேண்டும்.இது குறித்து தமிழக முதல்வருக்கு எங்கள் அமைப்பு சார்பாக வலியுறுத்த உள்ளோம் என்றார்.

3 comments:

  1. அ.அப்துல் ரஹ்மான்May 30, 2012 at 8:54 PM

    திரு.முகைதீன் இப்ராகிம்(avl),
    கூறியதாவது:-
    இரண்டு மதுபான விற்பனை கடைகள் அரசு எப்படி இக்கடைகளுக்கு அனுமதி அளித்தது என்று தெரியவில்லை.இது குறித்து தமிழக முதல்வருக்கு எங்கள் அமைப்பு சார்பாக வலியுறுத்த உள்ளோம் என்றார்.கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக அமைப்பு இன்று அதிமுக‌ அர‌சின் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
    அன்று கடந்த 5 (2006-2011)ஆண்டு திமுக அர‌சின் இரண்டு மதுபான விற்பனை கடைகள் அரசு எப்படி இக்கடைகளுக்கு அனுமதி அளித்தது தெரியவில்லையா?எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதா?இந்த கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக அமைப்பு?
    இதனால் பொதுமக்கள் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஏன் என்றால் இன்று "அதிமுக ஆட்சி அதனால்.

    ReplyDelete
  2. inshallah take severe action regarding the issue

    ReplyDelete
  3. Dear Brother Abdul Rahuman, may be you are right. Forget about the past, should we need encourage them (மதுபான விற்பனை கடைகள்)to continue their business or we have to apposed them. As a muslim brother please think your self and advice, your Suggestion is much valuable.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.