Friday, March 4, 2011

கீழக்கரையில் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர் தளம் !


தனியார் ஹெலிகாப்டரில் கீழக்கரை வந்த முன்னாள ரயில்வே அமைச்சர் ஜாபர் சரீப்

கீழக்கரை.
ஏர்வாடி அருகே விமான நிலையம் அமைய உள்ளதாக செய்திகள் உலா வருகிறது.ஆனால் இதுவரை அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரவில்லை இந்நிலையில் கீழக்கரை பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை அருகே ஏராளமான சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளன.
குறிப்பாக மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள முக்கிய தீவுகள் கீழக்கரை அருகே அமைந்துள்ளன.இதனால் இக்கடல் பகுதிக்கு வெளிநாட்டை சேர்ந்த கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் ஏராளமானோர் வருகின்றனர்.மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.மேலும் இப்பபகுதியில் பூமிக்கடியில் இயற்கை எரிவாயு அதிகப்படியாக கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் முன்னணி தொழில் நிறுவனங்களின் பார்வை வானம் பார்த்த பூமி என்று அறியபட்ட இப்பகுதியை நோக்கி திரும்பியுள்ளது.ஏராளமான தொழில் அதிபர்கள் இப்பகுதிக்கு வருகை புரிவதற்கு வாய்ப்புள்ளது.தற்போது பெரும்பாலான முண்ணனி தொழில் நிறுவன அதிபர்கள் கார்,ரயில் போன்ற பயணத்தை விட தனியார் ஹெலிகாப்டர்களில் அதிகளவில் பயணம் செய்வதை விரும்புகின்றனர்.தற்போதே அரசாங்கம் இப்பகுதியில் ஹெலிகாப்டர் நிரந்தர தளம் அமைப்பதற்கான ஈடுபட வேண்டும்.
ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்கு கீழக்கரையை விட பாதுகாப்பான இடம் வேறு இருக்க முடியாது. ஏற்கெனவே பல்லாண்டுக்கு முன் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட சென்ற மாதம் வந்து சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஜாபர் சரீப் வரை கீழக்கரையில் தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் ஹெலிகாப்டர் மூலம் வந்து சென்றிருக்கின்றனர்.
எனவே இப்பகுதியில் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர் சேவைக்கான ​ நிரந்தரமான ஹெலிகாப்டர் தளம் அமைக்க தடையில்லா சான்று வழங்குவதற்கு ஆய்வு நடத்தப்பட்டு தளம் அமைப்பற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.இதன் மூலம் எதிர்காலத்தில் இப்பகுதிக்கு தொழில் வாய்ப்புகள் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

2 comments:

  1. really i should help in our society.......basith

    ReplyDelete
  2. really it should be helpfull in our society.......!! by basith

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.