Tuesday, March 15, 2011

ராமநாதபுரம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது?

கீழக்கரை.மார்ச்.15.ராமநாதபுரம் தொகுதி தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்ற முறை கடலாடி தொகுதியில் இருந்த கீழக்கரை நகராட்சி தற்போது தொகுதி மறு சீரமைப்பின் மூலம் ராமநாதபுரம் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது இந்நிலையில் சென்ற முறை ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கீழக்கரையை சேர்ந்த ஹசன் அலி வெற்றி பெற்றார். இம்முறை தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் சிட்டிங் எம்.எல்.ஏ .அசன் அலி, செல்லதுரை அப்துல்லா,ரவிசந்திர ராமவன்னி,மெட்ரோ செய்யது ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் போட்டியிடுவார் என்பதாகவும் கீழக்கரை வாக்களர்களிடையே பேசப்படுகிறது.

யாருக்கு எந்த தொகுதி ,யார் வேட்பாளர் என்பது இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமாக தெரிந்து விடும்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.