Monday, March 14, 2011

முதல் முறையாக ராமநாதபுரம் தொகுதி வேட்பாளருக்கு வாக்களிக்கும் கீழக்கரை வாக்காளர்கள்!

கீழக்கரை மார்ச் 13: தமிழகம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு 59 ஆண்டுகளுக்கு பின் கீழக்கரை வாக்காளர்கள் தொகுதி மறு சீரமைப்பில் ராமநாதபுரம் தொகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ஊராட்சியாக இருந்து வந்த கீழக்கரை 1982ல் டவுன் பஞ்சாயத்து , 2004 ல் மூன்றாம் நிலை நகராட்சியாகவும்,கடந்த ஆண்டு இரண்டாம் நிலைக்கும் உயர்த்தப்பட்டது.கடலாடி சட்டசபை தொகுதியில் கீழக்கரை இடம் பெற்றதால் நகராட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.ஆகவே மறு சீரமைப்பில் கீழக்கரையை ராமநாதபுரம் தொகுதியில் இணைக்க பல்வேறு தரப்பினரும் கடும் முயற்சி மேற்கொண்டனர். இதை தொடர்ந்து கடந்த 13 சட்டசபை தேர்தலில் கடலாடி தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்களித்த கீழக்கரை மக்கள், 14வது சட்டசபை தேர்தலில் ராமநாதபுரம் சட்டசபை தொகுதி வேட்பாளருக்கு வாக்களிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.