Monday, March 21, 2011

கீழக்கரையில் போலீசாரின் வாகன சோதனையில் ரூ2 லட்சம் பிடிபட்டது!


காரில் வந்த அருள் செல்வன்(28) மெரூன் கலர் சட்டை மற்றும் காவல் துறை இன்ஸ்பெக்டர் இளங்கோவவை படத்தில் காணலாம் மற்றுமொரு காவல்துறை அதிகாரி , கருவாடு விற்ற பணம் என்று அருள்செல்வன் சொன்னதால் பணத்தை சோதனை செய்து விட்டு கையை நுகர்வதை படத்தில் காணலாம்.




கீழக்கரை மார்ச்.21: சட்டசபை தேர்தலையோட்டி தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடந்து வருகிறது. கீழக்கரையில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,தேர்தல் அலுவலர் ரத்தினம் மற்றும் காவலர்கள் நடத்திய வாகன சோதனையில் ரூ. 2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மண்டபத்தில் இருந்து கோவில்பட்டி சென்று கொண்டிருந்த க‌ாரை கீழக்கரை அருகே சோதனை செய்த போது இந்தப் பணம் சிக்கியது. முறையான ஆவணம் இல்லாத காரணத்தால் பணத்தை தேர்தல் அலுவலர் பறிமுதல் செய்தார்.காரில் வந்த கோவில்பட்டியை சேர்ந்த அருள் செல்வன்(28) பெரியசாமி, மற்றும் இண்டிகா காரை ஓட்டி வந்த டிரைவர் செந்தில் குமார் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது.
இப்பணம் வியாபாரத்துக்கான பணம் என்றும் ,கருவாடு வியாபாரம் செய்து வருவதாகவும் மண்டபத்தில் கருவாடு விற்று விட்டு கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டுருந்ததாகவும் ,அருள்செல்வன் தரப்பில் சொல்லப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.