Saturday, March 26, 2011

கீழக்கரை 45லட்சம் திருட்டு வழக்கில் சரணடைந்த லாட்ஜ் உரிமையாளர் மகனை விசாரிக்க மனு தாக்கல்

கைப்பற்றப்பட்ட நகைகளில் ஒரு பகுதி


கைது செய்யப்பட்ட மாயகுளத்தை சேர்ந்த சேக் அலாவுதீன்
கீழக்கரை, மார்ச் 26:
கீழக்கரை தொழிலதிபர் வீட்டில் நடந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை வழக்கில் சரணடைந்தவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
கீழக்கரை மேலத்தெரு சேர்ந்தவர் தொழிலதிபர் முசம்மில். இவரது வீட்டில் கடந்த ஜன.3ம் தேதி இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது ரூ.45 லட்சம் மதிப்புள்ள 118 பவுன் தங்க, வைர நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பினர். இதுகுறித்து டிஐ.ஜி அமல்ராஜ், எஸ்.பி., பிரதீப் குமார், டி.எஸ்.பி., ராமானுஜம் விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கில் கீழக்கரை விஏஓ சாவடி அருகே மாயாகுளத்தை சேர்ந்த சேக் அலாவுதீனை (21) கடந்த பிப்.2ம்தேதி இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். சேக் அலாவுதீனிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள 46 பவுன் நகை மற்றும் பணம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வழக்கில் தேடப்பட்ட ஏர்வாடியை சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர் ரஹ்மத்துல்லா (56) என்பவரை, பிப். 8ம்தேதி போலீசார் கைது செய்து 26 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
போலீசாரால் தேடப்பட்டு வந்த ரஹ்மத்துல்லாவின் மகன் அல்தாப் ஹூசைன் கடந்த 22ம் தேதி, தேனி மாவட்டம் பெரியகுளம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவர் பெரியகுளம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே அவரை காவலில் எடுத்து விசாரிக்க கீழக்கரை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று இன்ஸ்பெக்டர் இளங்கோவன் பெரியகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.