Thursday, March 10, 2011

நலப்பணிகளில் ஈடுபட பதவி தேவையில்லை !சீனா தானா பேட்டி

"2011 ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ள கீழக்கரையை சேர்ந்தவர்" என்ற தலைப்பில் நமது கீழக்கரை டைம்ஸ் இணையதளத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில் 637 பேர் தங்கள் எண்ணத்தை பதிவு செய்திருந்தனர்.
இதில் சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் 52 சதவீத ஆதரவையும்,மூர் டிராவல்ஸ் ஹசனுதீன் 19சதவீத ஆதரவையும்,நகராட்சி தலைவர் பசீர் அகமது,அசன் அலி.எம்.எல்.ஏ,மெட்ரோ செய்யது மற்றும் கோழிக்கடை புகாரி ஆகியோர் 13 சதவீத ஆதரவையும் பகிர்ந்து கொண்டனர்."இவர்கள் யாருமே இல்லை" என்பதாக 12சதவீதம் பேர் பதிவு செய்தனர்.
சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர்

இதுகுறித்து சீட் மற்றும் சீனா தானா அறக்கட்டளை தலைவரும் தொழிலதிபருமான சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் கூறியதாவது,
இந்த இணையதளம் மூலமாக என்னுடன் சேர்த்து மற்ற 4 சகோதரர்களுக்கும் ஆதரவை தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.மேலும் நாம் தமிழகம் முழுவதும் நமது அறக்கட்டளைகள் மூலமாக ஏழை மாணவர்களுக்கு உயர் கல்விக்குதவி,சிறு கடனுதவி மற்றும் பல்வேறு சமுதாய நலபணிகளை அந்தந்த ஊர் ஜமாத்கள் ஒத்துழைப்புடன் செய்து வருகிறோம் என்பதை அனைவரும் அறிவார்கள்.எனவே தேர்தலில் நின்று எம்.எல்.ஏ மற்றும் எம்.பியாக் தேர்வு பெற்றுதான் மக்களுக்கு நலப்பணி செய்ய முடியும் என்பதில்லை எம்.எல்.ஏ மற்றும் எம்பியாக இல்லாமலே சமுதாய பணிகளை தொடர முடியும் என்பதே என்னுடைய எண்ணம். இந்த இணையதளத்தில் பங்கு பெற்ற அனைவரும் ஒருங்கினைந்து நலப்பணிகள் பலவற்றை சென்னையிலிருந்தோ அல்லது கீழக்கரையிலிருந்தோ செயல்படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.இது போன்ற நல்ல முயற்சிகளுக்கு என்னுடய முழுமையான ஒத்துழைப்பும்,ஆதரவும் உண்டு என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார் .

மூர் டிராவல்ஸ் ஹசனுதீன்

கீழக்கரை இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் மூர் டிராவல்ஸ் ஹசனுதீன் கூறியதாவது, ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.தற்போது மாவட்ட இளைஞர் காங்கிரஸ்சில் செயல்பட்டு வருகிறேன்.இது வரை தற்போது போட்டியிடும் எண்ணம் இல்லை ஆனால் ராமநாதபுரம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு தலைமை உத்தரவிட்டால் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்றார்.
மெட்ரோ செய்யது

காங்கிரஸ் பிரமுகர் மெட்ரோ செய்யது கூறியதாவது,
நான் காங்கிரஸில் பல்லாண்டு காலமாக தொண்டாற்றி வருகிறேன்.ராமநாதபுரம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமானால் நிச்சயம் எனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.ராமநாதபுரம் தொகுதிகுட்பட்ட பெரும்பாலான ஊர்களில் நான் பல் வேறு சமூக பணிகள் ஆற்றியுள்ளேன்.எனவே இம்முறை எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு உள்ளேன் என்றார்.மேலும் பல்வேறு தரப்பினரும் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்றார்.

கீழக்கரை மதிமுக பிரமுகர் கோழிக்கடை புகாரி கூறியதாவது, ராமநாதபுரம் தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டால் நிச்சயம் சீட் கேட்பேன்.இப்பகுதியில் நான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.