கீழக்கரை வடக்கு தெருவை சார்ந்த ஹாஜா நெய்னா முகம்மது மனைவி ஷாஜஹான் பீவி(48), வீட்டில் கடந்த 1-10-11 அன்று அதிகாலை 2.30 மணியளவில் தூங்கி கொண்டு இருக்கும் போது திருடர்கள் சுவர் ஏறி குதித்து வீட்டினுல் புகுந்து ஒன்றரை பவுன் தங்கம் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை திருடி விட்டனர் என்று புகார் தெரிவிக்கபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஷாஜஹான் பீவி கீழக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
நான் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அதிகாலை வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் கைபையில் வைத்திருந்த ரொக்க பணம் மற்றும் நகையை எடுத்து கொண்டு செல்லும் போது நான் சத்தம் கேட்டு விழித்து சத்த போட்டேன் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் திருடர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இந்த திருட்டில் தட்டான் தோப்பை சேர்ந்த ராஜப்பாண்டி மற்றும் வடக்கு தெருவை சேர்ந்த அலி ஆகிய இருவர் மீது சந்தேகமாக உள்ளது என கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.