Friday, March 11, 2011

தி.மு.க. கூட்டணியிலிருந்து முஸ்லீம் லீக் வெளியேற வேண்டும்!இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மண்டல செயலாளர் ஜாஹாங்கிர் அறிக்கை

கீழக்கரை ஜஹாங்கிர் அரூஸி

கீழக்கரை மார்ச்.11.தி.மு.க., சார்பாக முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றை மீண்டும் தி.மு.க.,திரும்ப பெற்றுக் கொண்டது. இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை மண்டல அமைப்பு செயலாளர் ஜஹாங்கீர் அரூஸி கூறியதாவதுஸ்பெக்ட்ரம் ஊழல்,விலைவாசி உயர்வு,மின்வெட்டு,ஒரு குடும்ப ஆட்சி முறைகளால் தி.மு.க.,மீதும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீதும் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக மக்கள் கருதுகின்றனர்.ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றை தி.மு.க.,திரும்ப பெற்றுக் கொண்டதை தொண்டர்கள் ஏற்று கொள்ளவில்லை. மக்களின் வெறுப்புக்குரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை. இந்த கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை முஸ்லிம் லீக் தலைமை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.