வேட்பாளர் அப்துல் ஹமீது
கீழக்கரை, மார்ச் 22: ராமநாதபுரம் சட்டசபை தொகுதியை உள்ளடக்கிய கீழக்கரை பகுதிகளில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் வேட்பாளராக போட்டியிடும் அப்துல் ஹமீது திங்கள்கிழமை தீவிர பிரசாரம் செய்தார்.ராமநாதபுரம் தொகுதியை சேர்ந்த கீழக்கரை, மாயாகுளம், நத்தம், மோர்குளம், காஞ்சிரங்குடி, கோரைக்கூட்டம் ஆகிய ஊர்களில் அவர் பிரசாரம் செய்தார்.பின்னர் புதுமடம் கிராம ஜமாத்தார்களையும், கிராம மக்களையும் சந்தித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்.வேட்பாளருடன் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், பேரவை தொகுதிக்கான தலைவர் பைரோஸ்கான் ஆகியோர் உள்பட அமைப்பின் நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.