Wednesday, March 2, 2011

பெரியபட்டணம் மீனவர்களிடையே மோதல்! பதற்றம்


கீழக்கரை மார்.2௦ ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் புதுக்குடியிருப்பு கடலில் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் பொருத்தப்படாத படகை(வல்லம்) விசைப்படகு மீனவர்கள் நடுக்கடலுக்கு இழுத்துச் சென்றனர்.இதனால் இன்று அதிகாலை மீனவர்கள் மத்தியில் பதற்றம் காணப்பட்டது. மீனவர்களிடையே கடலுக்குள் மோதல் ஏற்படும் அபாய நிலை உள்ளது.பெரிய பட்டினம் மீனவர்கள் வல்லத்தில் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.இந் நிலையில் கடந்த சில மாதங்களாக விசைப்படகு மீனவர்கள் கரையோரத்தில் மீன் பிடித்து வந்தனர்.இதனால் ஏழை,எளிய மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.இது குறித்து விசைப்படகு மீனவர்களை பலமுறை எச்சரித்தும் கண்டு கொள்ளவில்லை.தொடர்ந்து கரையோரத்தில் மீன் பிடித்து வலைகளையும் சேதப்படுத்தினர். இந் நிலையில்,நேற்று இரவு வழக்கம் போல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வல்லங்கள் காணவில்லை.இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.சந்தேகமடைந்த மீனவர்கள் படகில் கடலுக்குள் சென்று பார்த்த போது,காணாமல் போன மூன்று படகுகளும் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு இருந்தது.மீனவர்கள் இதை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.இதே நிலை நீடித்தால் கடலில் மீனவர்களுக்குள் மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.