Saturday, March 26, 2011

ராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் உள்பட 510 பேர் மீது வழக்கு பதிவு! தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு



ராமநாதபுரம், மார்ச் 26:
தேர்தல் விதிமுறைகளை மீறிய ராமநாதபுரம் ம.ம.க., வேட்பாளர் உட்பட 510 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க., கூட்டணியின் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா, ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த கூட்டத்தில் பேசி வாக்கு சேகரித்தார். பின்னர் அரண்மனையிலிருந்து வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாகனங்களிலும் நடந்தும் ஊர்வலமாக ரோமன் சர்ச் வரை வந்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலமாக வந்ததாக பஜார் போலீசார் வேட்பாளர் ஜவாஹிருல்லா உட்பட 510 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் வேட்பு மனுதாக்கல் செய்த ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு தேர்தல் விதிமுறைகளை மீறி கும்பலாக வந்ததாக வேட்பாளர் ஜவாஹிருல்லா, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அசோக்குமார், ராமநாதபுரம் தொகுதி இணைச் செயலாளர் தஞ்சி சுரேஷ், நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார், நகர் செயலாளர் அங்குச்சாமி, வக்கீல் பிரிவு செயலாளர் ஹரிதாஸ், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மணிபாரதி உட்பட 250 பேர் மீது, நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.