Friday, March 4, 2011

பகலில் எரியும் தெரு விளக்கு!அசத்தும் நகராட்சி !


கீழக்கரை.மார்ச்.5

நீரின்றி அமையாது உலகு என் பது போல் இன்றைய விஞ்ஞான உலகில் மின்சாரமின்றி மனித வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய தேவையான மின்சாரம் தற் போதைய மக்கள் தொகை பெருக் கத்தினால் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தி இல்லாத காரணத்தினால் தமிழகத்தில் தினசரி மூன்று மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இவை தவிர பராமரிப்பு என்ற பெயரில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதத்திற்கு ஒரு நாள் 9 மணி நேரம் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மேலும், மின் வாரியம் மூலம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்து வருகிறது. அதில் அதிக மின்சாரம் உபயோகமாகும் மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அதிக வீடுகளில் போடப் பட்டுள்ள குண்டு பல்புகளுக்குப் பதிலாக குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரும் அதே நேரத்தில் வெப்பத்தை வெளியிடாத "சி.எப்.எல்.,' பல்புகளை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

மின்சாரப் பற்றாக்குறை காரணமாக கட்டாய மின் வெட்டு அமல்படுத்தி வரும் இன்றைய சூழ்நிலையில் கீழக்கரை நகராட்சியின் அலட்சியத்தால் பட்டப் பகலில் கீழக்கரையில் தெரு விளக்குகளை எரியவிட்டு மின்சாரம் விரயமாக்கப்பட்டு வருகிறது.ஊருக்கு்தா்ன் உபதேசம் என்ற சொல் இவர்களுக்கு பொருந்துகிறது.அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகளை அமைக்கும் நகராட்சி நிர்வாகம் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கவனிப்பதில்லை.

இது குறித்து மின்சாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தெருவிளக்குகளை பராமரிப்பது போன்ற பணிகளை நகராட்சிதான் செய்து வருகிறது.தானியங்கி முலம் இயங்கு்ம் இந்த விளக்குகளை சரியான முறையில் பராமரித்து மின்சாரத்தை சேமிக்க வேண்டு்ம் என்றார்.
நகராட்சி நிர்வாகம் விழித்து்க் கொள்ளுமா?

1 comment:

  1. AALE ILLATHA KADAILA YARUKUDA TEA ATHURE? ANTHA MATHURI THAN IRUKU ITHUVUM.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.