பருவநிலை மாற்றத்தை தொடர்ந்து ஏராளமான வெளிமாநில பறவைகளும் ,வெளிநாட்டு பறவைகளும் கடலோர மாவட்டஙகளில் குவிய தொடங்கியுள்ளது.குறிப்பாக வட இந்தியாவின் ஹிமாலயா மற்றும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இந்தியன் பிட்டா என்றழைக்கப்படும் பொன்னிக்குருவி அதிகளவில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பறவைகள் சரணாலயம்,சக்கரகோட்டை கண்மாய், மற்றும் கீழக்கரை அதன் சுற்றுப்புற உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகிறது.பறவைகளின் வருகைக்காக காத்திருந்த வேட்டைக்காரர்கள் தங்களின் பணியை செவ்வென தொடங்கிவிட்டார்கள்.

இது குறித்து கீழக்கரை மக்கள் சேவை இயக்கத்தின் முஜீப் கூறுகையில்,
பொன்னிக்குருவி மற்றும் கம்பத்தான் வகை இறைச்சி ருசியாக இருக்கும் என்ற காரணத்தினால் இவ்வகை குருவிகளுக்கு அதிக கிராக்கி உள்ளது.இவர்களால் பிடிக்கப்படும் பொன்னிக்குருவி ரூ40லிருந்து ரூ50 வரை விற்கப்படுகிறது.முன்பு கீழக்கரை நகரில் தெரு தெருவாக விற்பனை செய்யப்பட்ட்டது தற்போது வனத்துறையின் நடவடிக்கையால் கீழக்கரை பகுதிகளில் பொன்னிக்குருவி விற்பனைக்கு வருவது வெகுவாக குறைந்து விட்டது.ஆனாலும் மறைமுகமாக ஒரு சிலர் விற்பனை செய்கின்றனர்.என்றார்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.