கீழக்கரை எஸ்.எஸ்,.முகம்மது யூசுப் கே.எம்.எஸ் ரசீனா பீவி அறக்கட்டளை சார்பாக வடக்குதெரு ஜமாத் மூலமாக 18,19,20,21வது ஆகிய வார்டு மக்களுக்காக திடக்கழிவு அகற்றும் ஹைட்ராலிக் வாகனம் அர்பணிக்கப்பட்டது.
http://keelakaraitimes.blogspot.com/2012/11/blog-post_9.html
இந்த வாகனத்தின் மூலம் அந்தந்த வார்டுகளில் குப்பைகள் அகற்றும் பணி துவங்கியது.மக்களுக்கு பயன்படும் வகையில் வாகனம் வழங்கிய தனியார் தொண்டு நிறுவனத்திற்கு கவுன்சிலர்கள் ஜெயபிரகாஷ்,முகைதீன் இப்ராகிம்,இடிமின்னல் ஹாஜா,,அருசியாபேகம் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.
வாழ்த்துகள்..வடக்குத் தெரு கீழக்கரை எஸ்.எஸ். முகம்மது யூசுப் - கே.எம்.எஸ்.ரசீனா பீவி அறக்கட்டளையினர் நகரின் சுகாதார சீர்கேட்டை மனதில் கொண்டு தாராள மனதுடன் வழங்கிய நவீன வசதியுடன் குப்பை அள்ளும் வண்டியை 18,19,20 மற்றும் 21 வார்டு பகுதிகளின் சுகாதார மேம்பாட்டிற்காக வழங்கியமைக்கு உளமாரந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்..இது போல மற்ற பகுதிகளிலும் கூட்டு முயற்சியால் நடக்குமானால் குப்பைகரையான கீழக்கரை கண்ணுக்கு குளிச்சியான கரையாக மாறி இப்போதைய நகராடசி நிர்வாகத்திற்கு சாவு மணி அடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
ReplyDeleteவிழாவில் நகராட்சி நிர்வாகத்தை சார்ந்தவர்களை ஒதுக்கி வைத்தமைக்கு சூடு சொரனை இருந்தால் அவர்கள் வெட்கி தலை குனியட்டும்..
இது போன்ற வாகனம் தான் நமதூர் வீதி அமைப்புக்கு ஏற்றது. இதை விடுத்து நமது வீதிகளுக்கு ஒவ்வாத பதினெழு லட்ச்ம் செலவில் அதிக கமிஷனுக்கு ஆசைப்பட்டு கடந்த நிர்வாகத்தில் வாஙகப்பட்ட டம்பர் பிளஷர் அழ்கு காளையாக நகராட்சி அலுவலகத்தில் வீற்றிருக்கையில் மீண்டும் இருபத்தைந்து லடச செலவில் மற்றொறு டமபர் பிளஷர் வாங்க நிதி ஒதுக்கி இருக்கிறார்களாம். என்ன ஒரு மக்கள் நலம் பேணாத கொடுமையான நிர்வாகம்??