பிடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள பொன்னிக்குருவி என்றழைக்கப்படும் இந்தியன் பிட்டாவை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் வனத்துறை சரகர் காப்பாளர் சுந்தரக்குமார் உத்தரவின் பேரில் கீழக்கரை வனச்சரகர் ஜெயராமன் தலைமையில் வனவர் முத்து வனக்காப்பாளர்கள் பாலகிருஸ்ணன்,ரவிகுமார், ஆகியோர் கீழக்கரை,ஏர்வாடி தோட்டங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது பொன்னிக்குருவிகளை வேட்டையாடி விற்பனை செய்து சடைமுனியன் வலசையை சேர்ந்த நாகராஜ்,கருப்பசாமி,கருப்பச்சாமி,வெள்ளைத்துரை ,ராமராஜன்,முனீஸ்வரன் ஆகிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் கோர்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான பொன்னிக்குருவிகள் மற்றும் வலைகள் கைப்பற்றப்பட்டன.
இவர்களிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொன்னிக்குருவிகள் கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்றும் மேலும் தடை செய்யப்படுள்ள பொன்னிக்குருவிகளை வேட்டையாடவோ,வேட்டையாடியதை வாங்கவோ வேண்டாம் என்று வனத்துறை சார்பில் பொதுமக்களை கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.