Monday, November 26, 2012

ஏர்வாடியில் ம‌ர‌த்த‌டியில் க‌ல்வி க‌ற்கும் மாண‌வ‌ர்க‌ள்!ஆமை வேக‌த்தில் அர‌சுப‌ள்ளி க‌ட்டிட‌ப‌ணி!

ஒரு புற‌ம் டிஜிட்ட‌ல் வ‌குப்பு,ஸ்மார்ட் வ‌குப்பு,கரும்பலகைக்கு பதில் டிஜிட்டல் திரை பொருத்தி,  பாட‌ங்க‌ள் தொடர்பான வீடியோ கிளிப்பிங்ஸ்,தொடுதிரை என்றெல்லாம் ப‌ள்ளிக‌ளை ந‌வீன‌ம‌யமாக்கும் திட்ட‌ங்க‌ளை  அர‌சாங்க‌ம் அறிவித்து கொண்டிருக்கிற‌து. ஆனால் ம‌ற்றோரு புற‌ம் ஏர்வாடி போன்ற‌ கிராம‌ ப‌ள்ளிக‌ளில் மாண‌வ‌ர்க‌ள் இன்ன‌மும் ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ வெயிலிலும்,ம‌ழையிலும் ம‌ர‌த்த‌டியில் க‌ல்வி க‌ற்று கொண்டிருக்கிறார்க‌ள் .

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் கடலாடி ஒன்றியம் ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். போதுமான வகுப்பறைகள் இல்லாமல் நெருக்கடியில் அவதிப்பட்டு வந்தனர். 2008ல் நபார்டு திட்டத்தில் பள்ளியில் கூடுதலாக 24 வகுப்பறைகள், சுற்றுச்சுவர், கழிப்பறை கட்டுவதற்கு ரூ. 2.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது

 பொதுப்பணித்துறை சார்பில் ஆமை வேகத்தில் நடந்து வந்த இப்பணி, கடந்த மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் தொட‌ர்ந்து மாணவ, மாணவிகள் வகுப்பறையின்றி மரத்தடி நிழலில் படிக்கும் அவலநிலை ஏற்ப‌ட்டு உள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பசாமி கூறியதாவது;இந்த விபரம் சரிவர தெரியவில்லை. பணி நடக்காதது குறித்துபொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளேன், என்றார்

 பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துல்கருணை பாட்சா கூறியதாவது,
காண்ட்ராக்ட‌ரி அலட்சியத்தால் கட்டுமான பணி நிறைவடையாமல் உள்ளது. இஷ்டம் போல் வேலை செய்கின்றனர். அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. போதிய வகுப்பறை இன்றி மரத்தடியில் வகுப்புக்கள் நடத்தப்படுவதால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாக உள்ளது, என்றார்.

பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் குணசேகரன் கூறியதாவது,


தலைமை ஆசிரியரிடம் விசாரித்து, கட்டுமான பணி உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.