சுற்றுசூழல் பாதிப்பை தடுக்கும் விதத்தில் கீழக்கரை நகராட்சியில் கடந்த பிப்ரவரி 2 முதல் பிளாஸ்டிக் பை மற்றும் கப்களுக்கு தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது முதல் ஒருமாத காலத்திற்கு கடைகளில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து விற்பனை செய்யும் பைகளை பறிமுதல் செய்து வந்தனர். இதனால் பிளாஸ்டிக் பை மற்றும் கப்களின் புழக்கம் குறைந்து வந்தது. கண்காணிப்பு பணியை அதிகாரிகள் தொடர்ந்து செய்யாததால் மீண்டும் அதிகளவில் பிளாஸ்டிக் பை விற்பனைக்கு வந்துவிட்டது.
ஆட்டு இறைச்சிக்கடை, மீன்கடை, காய்கறி கடை மற்றும் டீக்கடை, ஓட்டல் ஆகியவற்றில் அதிகளவில் பிளாஸ்டிக் பை உபயோகம் உள்ளது. டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் கப்கள் பயன் படுத்துகின்றனர். இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது
இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு கழக பொருளாளர் செய்யது இபுராகிம் கூறுகையில்,
‘கீழக்கரையில் பிப்ரவரி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இதை செயல்படுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. புகார் செய்தால் ஆய்வு என்ற பெயரில் ஒருசில சில்லரை கடைகளில் மட்டும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்கின்றனர். மொத்த வியாபாரிகளை கண்டு கொள்வதில்லை. பிளாஸ்டிக் பைகள் மொத்த கடைகளில் விற்பனை செய்வதால்தான் சிறுவியாபாரிகள் வாங்கி பொது மக்களுக்கும் கொடுக்கின்றனர். மொத்த விற்பனையை தடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
இது குறித்து ஜலாலுதீன் என்பவர் கூறுகையில்,
பொதுமக்களிடம் பிளாஸ்டிக் தடை சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சணல் பை,காகித பை மற்றும் துணிப்பைகளை பயன்படுத்தலாம் இதற்கான செலவு அதிகமாக இருப்பதால் கடைக்காரார்கள் இதை தவிர்ப்பார்கள் என்வே இதற்கு அரசாங்கம் மானியம் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.வெறும் சட்டங்களால் மட்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து விட முடியாது.மாற்று ஏற்பாடுகளையும் அராசாங்கம் வழிகாட்டினால் இதை முழுமையாக ஒழிக்க முடியும் என்றார்.
சாலையில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள்,கப்களில் தேங்கும் தண்ணீரில் டெங்கு கொசு உருவாகும் வாய்ப்புள்ளது எனவே அதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் வேண்டுகோள் விடுத்திருந்தார்
இருபதாம் நூற்றாண்டின் இறுதி காலக் கட்டங்களில் அதாவது 1960, 70 களில் ஊரில் மீன் வாங்க போக வேண்டுமானால் வீட்டிலிருந்து பனை ஓலையிலான பழைய தண்ணீர் பட்டைகளை கொண்டு செல்ல வேண்டும் அல்லது மின் கடையிலேயே புதியது கிடைக்கும்..
ReplyDeleteஇறைச்சி வாங்கப் போனால் அங்கேயே ஓலைப் பட்டையில் கட்டித் தருவார்கள்..
அப்போதெல்லாம் வியாதியை தூண்டும் கறிக் கோழிக் கடைகள் அறவே கிடையாது.. வீட்டில் வளர்க்கும் நாட்டு கோழி கறிதான்..
பலசரக்கு கடைக்கு பொருள் வாங்கச் சென்றால் அனைத்து பொருட்களையும் செய்தி தாளிலேயே கட்டித் த்ருவாரகள்.. அதிகமாக வாங்கினால் ஓலைப் பையில் வைத்து சணலால் கட்டித் த்ருவாரகள்..
நகைக்கடை, ஜவுளி கடைக்கு சென்றால் வங்கும் பொருட்களை துணிப் பையில் போட்டுதுத் தருவார்காள்..
பிலாஸ்டிக் பைகள் பயன்பாடு அறவே கிடையாது. உற்பத்தியும் கிடையாது..
மேலும் செய்தி தாள்களும், ஓலைப் பட்டைகளும் எளிதில் மக்கக் கூடியது.. இது போக அந்தக் காலக் கட்டங்களில் அனைவர் வீட்டிலும் ஏழை, பணக்க்காரன் என பாகுபடு இல்லாமல் விறகு அடுப்புதான்.. விறகை பற்ற வைக்க, பொருட்களை கொண்டு செய்திதாள்களையும், பனை ஓலைகளையும் பயன் படுத்தி அதயும் அழித்து விடுவார்கள்..அது ஒரு கனாக் காலம்..
அடுப்பை தவிர்த்து மற்ற்ப்படி பின் காலத்திற்கு செல்வது தான் சாலச் சிறந்தத அத்னால் இப்போது இருபபது போல குப்பை பிரச்சனை எழாது.. கீழக்கரையும் குப்பைகரையாக மாற வேண்டிய சூழ்நிலையும் உருவாகாது.. நடக்குமா. உம்ம்ம்ம்!!!
இதை விடுத்து மானியம் அது இது என்று போனால் ஊழலுக்கும் லஞ்ச லாவண்ணியத்திற்குத்தான் வழி வகுக்கும்..இது கைப் புண்.பட்டுத் தான் தெரிய வேண்டுமா?? அதுவும் இப்போது நகராட்சி செயல் படும் இந்த லட்சணத்தில்!!!