ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை சமயங்களில் நீர்நிலைகளை தேடி கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு பற வைகள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். இந்த பற வைகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி,புல்லந்தையை அடுத்த சிறு கண்மாய்,சக்கரைகோட்டை கண்மாய்,சாயல்குடி அருகே பறவைகள் சரணாலயம் மற்றும் நீர்நிலைகளில் உள்ள மரங்களில் கூடு கட்டி இனப் பெருக்கம் செய்து பருவகாலம் முடிந்ததும் மீண்டும் சொந்த நாடுகளுக்கே திரும்பி சென்று விடும்.
இவ்வாறு ஆண்டுதோறும் தாரா, வடுகன்தாரா, உள் ளான், சிறகி, கூலைக்கிடா, செங்கால்நாரை, நத்தை கொத்திநாரை, கிளிமூக்கு நாரை உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வெளிநாட்டு பறவைகளை காப்பதற்கும், அவற்றின் வருகையை அதிகரிக்கவும் வனத் துறை சார்பில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்ட நிர்நிலைகளில் உரிய ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள தால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கி யுள்ளன. இந்த பறவைகளில் நீர்நிலைகளில் உள்ள மரங்களில் தங்கியிருந்து குரல் எழுப்புவது ரம்மியமாக உள்ளது.
இறைச்சிக்காக இப்பறவைகளை வேட்டையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.