Thursday, November 29, 2012

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் காட்சிபொருளாக‌ கொசும‌ருந்து இய‌ந்திர‌ங்க‌ள்!க‌வுன்சில‌ர் குற்ற‌ச்சாட்டு!

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் கொசும‌ருந்து அடிக்கும் மிசின்க‌ள் இருந்தும் முறையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில்லை என‌‌ ந‌க‌ராட்சி க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் குற்ற‌ஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அவ‌ர் கூறிய‌தாவ‌து, கீழ‌க்க‌ரையில் பொதும‌க்க‌ள் மலேரியா,டெங்கு காய்ச்ச‌ல் என்று அவதிப‌ட்டு வ‌ருகிறார்க‌ள்.இந்த‌ ச‌ம‌ய‌த்தில் வேக‌மாக‌ செயல்ப‌ட்டு காய்ச்ச‌ல் ப‌ர‌வாம‌ல் த‌டுப்ப‌த‌ற்கு  ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.

அத‌ற்கு நேர்மாறாக‌ இப்ப‌ணிக‌ள் மிக‌வும் தொய்வாக‌வே ந‌டைபெறுகிற‌து.அத‌ற்கு உதார‌ண‌ம் கொசு ம‌ருந்து அடிக்கும் மிஷின்க‌ள் இருந்தும் நீண்ட‌ நாட்க‌ளாக‌ கீழ‌க்க‌ரை ப‌குதி முழுவ‌தும் கொசு ம‌ருந்து அடிக்காம‌ல் காட்சி பொருளாக‌ ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்தில் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ந‌க‌ராட்சி அலுவ‌ல‌ர்க‌ளிட‌ம் கேட்டால் ம‌ருந்தில்லை,ஆள் ப‌ற்றாக்குறை என‌ ப‌ல‌ கார‌ணங்க‌ளை கூறுகின்ற‌ன‌ர்.அப்ப‌டியே ப‌ய‌ன்ப‌டுத்தினாலும் பேருக்காக‌ கீழ‌க்க‌ரையில் ஏதாவ‌து  ஒரு ஏரியாவிற்கு ம‌ட்டும் கொசு ம‌ருந்து அடிக்கின்ற‌ன‌ர்.

சுகாதார‌ ப‌ணிக‌ளை வேக‌மாக‌ முடுக்கி விட‌ வேண்டிய ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ‌ இதுபோன்ற‌ குறைபாடுக‌ளை க‌ண்டுகொள்ளாம‌ல் இருப்ப‌து
 ம‌க்க‌ளிடையே அதிருப்தியைதான் ஏற்ப‌டுத்தும் என்றார்.



 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.