Thursday, November 29, 2012

தேசிய கராத்தே போட்டியில் மாண‌வ‌ர் ஜ‌மாலுதீன் சாத‌னை! முத‌லிட‌ம் பெற்று தங்கம் வென்றார்!



தேசிய கராத்தே போட்டியில்  ஏர்வாடி பள்ளி மாணவர் சாதனை

தேசிய கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த ஏர்வாடி மெட்ரிக். பள்ளி மாணவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஏர்வாடி எலைட் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்கு தகுதி பெற்றிருந்த‌ன‌ர்.

இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் ஜெ.ஜெ. உள் அரங்கில் தேசிய போட்டி நடந்தது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மணிப்பூர் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஏர்வாடி எலைட் மெட்ரிக். பள்ளி 10ம் வகுப்பு மாணவர் செய்யது ஜமாலுதீன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

மாவட்ட அளவிலான போட்டியில் இப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர் மணிபாரதி முதலிடம், 7ம் வகுப்பு மாணவர் செய்யது அபுதாகிர் 3ம் இடம் பிடித்து பதக்கம் பெற்றனர்.

 சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் முகமது அலிஜின்னா, முதல்வர் ஷேக்மஜீது, துணை முதல்வர் சிவசுப்ரமணியன், கராத்தே பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.