Saturday, November 24, 2012

ராமநாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் புதிய‌ தொழில் தொட‌ங்க‌ வ‌ர‌வேற்பு!மானிய‌ம் ம‌ற்றும் க‌ட‌ன் வ‌ழ‌ங்க‌ அர‌சு ஏற்பாடு!



புதிய தொழில் தொடங்க ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில்முனைவோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
படித்த தலைமுறையினர் தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

இத்திட்டதின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்த பட்சம் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான தொழில் திட்டங்கள் முதல் அதிக பட்சம் ரூ.1 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு கடன் வசதி வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் வழங்க பரிந்துரை செய்யப்படும்.

பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முதல் அங்கீரிக்கப்பட்ட தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூலம் தொழிற் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொது பிரிவை சார்ந்தோர் 35 வயதிற்கு மிகாமலும், சிறப்பு பிரிவினர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் சார்ந்தவராக இருப்பின் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். வருமான வரம்பு இல்லை. முன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

சொந்த முதலீடு திட்ட மதிப்பீட்டில் தொழில் நுனைவோர் பொதுப்பிரிவினராக இருந்தால் 10 சதவீதம், மற்றும் சிறப்பு பிரிவினராக இருந்தால் 5 சதவீதம் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் துவங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலமாக வழங்கப்படும் கடனுக்கு 3 சதவீதம் பின்முனை வட்டி மானியம் வழங்கப்படும்.

பங்குதாரர் நிறுவனங்களும் இத்திட்டத்தில் சேர்ந்த பயனடையலாம். தொழில் முனைவோரிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் கலெக்டரின் தலைமையில் பெறப்பட்டு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு கடன் வழங்க பரிந்துரைக்கப்படும்.
கடன் பெறும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின்¢ மூலம் ஒருமாதம் பயிற்சி அளிக்கப்படும். சிட்கோ தொழிற்பேட்டையில் முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டம் குறித்து விபரங்களை ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையத்தை அணுகி விபரம் பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.