கீழக்கரையில் கொசுமருந்து இயந்திரங்கள் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை என கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது குறித்து கீழக்கரை நகராட்சியின் சுகாதார ஊழியர் கூறுகையில்,
அனைத்து வார்டுகளுக்கும் ஒரே நாள் கொசுமருந்து அடிப்பதில்லை.அரசின் சுகாதாரத்துறை பணிகளின் வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு வார்டாக நேரம் நிர்ணயித்து முறையாக கொசுமருந்து அடித்து வருகிறோம் அதுமட்டுமில்லாமல் அந்தந்த வார்டு பிரதிநிதிகளிடம் கொசுமருந்து அடித்து விட்டு ஒப்புதல் கையெழுத்தும் பெறுகிறோம்.எவ்வித தொய்வில்லாமல் முறையாக கொசுமருந்து அடிக்கப்படுகிறது என்றார்.
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறுகையில்,
அந்தந்த வார்டுகளுக்கு முறையாக கொசுமருந்து அடிக்கப்படுகிறது.நகரில் சுகாதாரப்பனி செம்மையாக நடைபெறுகிறது.கவுன்சிலரின் குற்றாச்சாட்டில் உண்மையில்லை என்றார்.
உங்களை மதித்து உங்கள் வாக்கு மூலத்தை ஏற்றுக் கொள்கிறோம்..
ReplyDeleteவீதிகள் தோறும் குப்பைகள், சாக்கடை நீர். பலி வாங்கத்துடிக்கும் மூடப்படாத வாறுகாலகள்( இன்றைய தினமலரில் போட்டோவுடன் கூடிய செய்தி பார்த்திருப்பீர்கள் என் நம்புகிறோம்..)இதற்கு என்ன உங்களின் பதில்?
தொடக்கம் முதலே எல்லா விதமான குறைகளுக்கும் சால்சாப்புதான் சொல்லுகிறீர்கள்.. அதை விடுத்து ஆககப் பூர்வமாக செயல் படுங்கள். ஊர் சுகாதரத்தை செவ்வனே காப்பாறுங்கள், தயவு செய்து.. இன்னும் உங்களை நம்புகிறோம் உங்கள் வாக்குறுதியை நம்பி ஓட்டுப் போட்ட மக்களை ஏமாற்ற மாட்டீர்கள் என்று..