கீழக்கரை அன்புநகரைச் சேர்ந்த கணேசன் மகன் ஜோதிவேலன்(10). முதுகுளத்தூரில் தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரகாலமாக கீழக்கரை அன்புநகரில் உள்ள அவரது தாயார் வீட்டில் தங்கிவிட்டு நேற்று முன்தினம் முதுகுளத்தூர் சென்றார். அன்றிலிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றார்.
ஆனால் காய்ச்சல் குறையாமல் இருந்ததால் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை.
இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். ஆனால் போகும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவத்தால் கீழக்கரை அன்புநகர் பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
மக்கள் சேவை அமைப்பின் முஜீப் கூறுகையில் ,
மக்கள் சேவை அமைப்பின் முஜீப் கூறுகையில் ,
கடந்த சில மாதங்களில் இதுவரை கீழக்கரையில் காய்ச்சலுக்கு நான்கு உயிர்கள் பலியாகி விட்டது.ஆனால் அரசு சுகாதரத்துறையின் மாவட்ட துணை இயக்குநர் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் கீழக்கரையில் டெங்கு இல்லை என்று மேலிடத்துக்கு தகவல் தெரிவிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களை டெங்குவால உயிரழப்பு இல்லை எனறு வேறு காரணங்களை கூறுகின்றனர்.இவர்களின் பொறுப்பற்ற இந்த செயலால் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் கீழக்கரையில் மந்தமாக நடைபெறுகின்றனறன.நாளுக்கு நாள் காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.ஏராளாமான கீழக்கரையை சேர்ந்தோர் மதுரை மற்றும் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.பரவி வரும் டெங்குவின் பாதிப்பால் விரைவில் பொது மக்கள் ஊரை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது.தொரந்து இது போன்று அரசு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் கீழக்கரையின் அனைத்து ஜமாத்களும் ஒன்று கூடி நமதூரில் நிலவும் இந்த அவல நிலையை போக்க நடவடிக்கை எடுக்க ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மக்கள் சேவை அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் யார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்! இந்த இயக்கம் எங்கு செயல்படுகிறது.? மக்களுக்கு என்ன சேவை செய்தார்கள்? எப்போது, எங்கே செய்தார்கள்?? என்று செய்தி வெளியிட வேண்டியது கீழக்கரை டைம்ஸின் கடைமையாகும்.
ReplyDelete