Friday, November 23, 2012

கீழ‌க்க‌ரையில் பிளாஸ்டிக் பைக‌ள் ப‌றிமுத‌ல்!டிச‌ 10 வ‌ரை கால அவகாச‌ம்!



 கீழக்கரை நகராட்சியில் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கீழக்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பை மற்றும் கப்கள் விற்பனை  என்ற தலைப்பில் சில தினங்களுக்குமுன் செய்திக‌ள் வெளியானது. இதைத்தொடர்ந்து நகராட்சி கமிஷனர் முகமது முகைதீன் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர் மூர்த்தி மற்றும் அலுவலர் கள் கீழக்கரை நகர் முழுவ தும் அதிரடி ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து வியாபாரி சங்க தலைவர் அகமது சகாப்தீன், செயலாளர் சுப்ரமணியன், பொருளா ளர் சந்தாண கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கமிஷ னரை சந்தித்து பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்கு மொத்த வியாபாரிகளுக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 10ம் தேதிவரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள் ளது.

இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் மூர்த்தி கூறுகையில், ‘இந்த கால அவகாசம் மொத்த வியாபாரிகளுக்குத்தான் பொருந்தும். சிறு வியாபாரிகள் வைத்திருக்கும் பைகளில் 41 மைக்ரான் என்று சீல் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மைக்ரான் குறையாகவே உள்ளது. ஆகவே சிறு வியாபாரிகள் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ பறிமுதல் செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

டீக்கடை, ஓட்டல்களில் பலகாரங்கள், உணவு பண்டங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்தால் அந்த பொருளை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.