21வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
உள்ளாட்சி சட்டப்படி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடைகள் உள்ளிட்ட தொழில்கள் நடத்துவதற்கு நகராட்சி நிர்வாகத்திடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
நமதூரில் பெட்டிக்கடை ,டீக்கடை,ஓட்டல்,லேத் பட்டரை,அறுவை மில்கள் உள்ளிட்ட ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆனால் நகராட்சி சார்பில் சுமார் 700 கடைகளுக்கு மட்டுதான் முறையான உரிமம் வழங்கி அதற்கான தொகை வசூல் செய்யப்படுகிறது.மீதமுள்ள கடைகள் , சிறு தொழிற்கூடங்கள்,அறுவை மில்கள், கிரில் பட்டரைகளுக்கு முறையான உரிமம் வழங்காமல் பாதி தொகையை மட்டும்("உதாரணத்திற்கு" அரசின் உரிமம் நிர்ணய தொகை ரூ3000 என்றால் ரூ1500 மட்டும்) வியாபரம் செய்பவர்களிடம் நகராட்சி ஊழியர்கள் வசூல் செய்து கொண்டு ரசீது கொடுப்பதில்லை.இப்படி சட்டவிரோதமாக வசூல் செய்யும் பணம் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை இதனால் லட்சக்கணக்கில் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.