மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ என்று பரிசோதித்தனர்.அதில் சிலருக்கு கல்லீரல் மூளை உள்ளிட்டவைகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.எனவே இது டெங்கு அல்லாத புதிய நோய் பாதித்து உள்ளதோ என்ற சந்தேகம் உருவானது.
இது குறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது,
ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இல்லாத அறிகுறிகளுடன் சில நோயாளிகள் இருந்ததால் அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.இதன் படி போகலூர் வட்டாரத்தில் 10 பேருக்கும், நயினார்கோவில் வட்டாரத்தில் 15 பேருக்கும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஓசூரில் உள்ள ரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சோதனை முடிவில் நயினார் கோவிலில் 2 பேருக்கும்,போகலூரில் 6 பேருக்கும் மாட்டு உண்ணிகள் மூலம் பரவக்கூடிய ரிக்கட்சியல் எனப்படும் புதிய நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இந்த கிருமி உண்ணி ஆடு,மாடுகளை தாக்கி அதன் மூலம் மனிதர்களுக்கு பரவி உள்ளது.மனிதர்களின் உடலில் இந்த உண்ணி ஒட்டி கொண்டு தோல் பகுதி வழியாக கிருமிகளை செலுத்தும்.இதனால் ரிக்கட்சியல் நோய் பாதிப்பு ஏற்பட்டு தொடர் காய்ச்சல் கல்லீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது.
இதற்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ள பரிந்துறைக்கப்பட்ட மருத்துவர்கள் மூலம் உரிய மாத்திரைகளை முறையாக எடுத்து கொண்டால் 48 மணி நேரத்திலேயே குணப்படுத்தி விட முடியும்.இந்த ரிக்கட்சியல் கிருமி பொதுவாக எலிகளைத்தான் தாக்கும்.
கடந்த 1808ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உருவான இந்த நோயின் பாதிப்பு கடந்த 2003ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னிந்தியாவில் பரவ தொடங்கியது.தமிழகத்தில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இதற்கு முன்பு இந்த நோய் பாதிப்பு இருந்ததாக எவ்வித குறிப்புகளும் இல்லை.எனவே இப்பகுதியில் முதல் முதாலாக ஏற்பட்டு இந்நோயை உரிய சிகிச்சை மேற்கொண்டால் குணப்படுத்தி விடலாம் எனவே பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.
மாவட்டம் முழுவதும் டெங்கு அல்லாமல் ரிக்கட்சியல் நோய் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் பொது டெங்கு கொசு உருவாகாத வகையில் சுற்றுப்புறங்களை வைத்து கொள்ள வேண்டும்.கால்நடைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.குடிநீரை காய்ச்சிய பின்தான் குடிக்க வேண்டும்.இவற்ற கடைபிடித்தாலே நோய்களை தவிர்த்து கொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.