Monday, November 5, 2012

கீழ‌க்க‌ரை -ராம‌நாத‌புர‌ம் சாலை விப‌த்தில் கீழ‌க்க‌ரை இளைஞ‌ர் உள்ளிட்ட‌ 2 பேர் உயிர‌ழ‌ப்பு

சிகிச்சை ப‌லனின்றி உயிர‌ழ‌ந்த‌ ச‌தீஷ்
                  

                                                                                                      


    ச‌ம்ப‌வ‌ இட‌த்தில் உயிர‌ழ‌ந்த‌ லாட‌சாமி

 
கீழ‌க்க‌ரை பிர‌புக்க‌ள் தெருவை சேர்ந்த‌ செய்ய‌து அபுதாகிர் ம‌க‌ன் ந‌சுரூதீன்(20) ம‌ற்றும் அண்ணா ந‌க‌ர் க‌ருப்பையா ம‌க‌ன் ச‌தீஸ்(20) ஆகியோர் க‌ட‌ந்த‌ 1ம்தேதி ப‌ல்ச‌ர் பைக்கில் இருவ‌ரும் கீழ‌க்க‌ரையிலிருந்து ராம‌நாத‌புர‌ம் நோக்கி சென்றுள்ள‌ன‌ர்.

அச்ச‌ம‌யம் திருப்புல்லாணி அருகே செல்லும் போது சாலையில் ந‌ட‌ந்து சென்ற‌ ராம‌நாத‌புர‌ம் வைகை ந‌க‌ரை சேர்ந்த‌ ர‌த்தின‌ம் ம‌க‌ன் மாட‌சாமி(42) என்ப‌வ‌ர் மீது பைக் மோதிய‌தில் ப‌டுகாய‌ம் அடைந்த‌ லாட‌சாமி ச‌ம்ப‌வ‌ இட‌த்திலேயே உயிர‌ழ‌ந்தார். ம‌றுபுற‌ம் பைக் நிலை த‌டுமாறி விழுந்த‌தில் பைக்கில் வ‌ந்த‌ இருவ‌ரும் ப‌டுகாய‌ம் அடைந்த‌ன‌ர்.

ப‌ல‌த்த‌ காய‌ம‌டைந்த‌ வாலிப‌ர்க‌ள் இருவ‌ரும் ராம‌நாத‌புர‌ம் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்டு மேல் சிகிச்சைக்காக‌ ம‌துரை அர‌சு மருத்துவ‌ம‌னைக்கு அனுப்ப‌ப்ப‌ட்டு சிகிச்சை அளிக்க‌ப்ப‌ட்ட‌து.இதில் சிகிச்சை ப‌ல‌னின்றி ச‌தீஸ் உயிர‌ழ‌ந்தார்.ப‌டுகாய‌ம‌டைந்த‌ ந‌சீருக்கு தொட‌ர்ந்து சிகிச்சை அளிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.இது குறித்து திருப்புல்லாணி போலீசார் வ‌ழ‌க்கு ப‌திவு செய்து விசார‌ணை ந‌ட‌த்தி வ‌ருகிறார்க‌ள்.

 கீழ‌க்க‌ரை - ராம‌நாத‌புர‌ம் சாலையில் தொட‌ர் விப‌த்துக்க‌ள் இப்ப‌குதி ம‌க்க‌ளிட‌ம் பெரும் துய‌ர‌த்தை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.

1 comment:

 1. சாலை விபத்துகளைத் தவிர்க்க என்ன வழி?

  சாலைகளில் இப்போது விபத்துக்கள் அதிகரித்துள்ளன. சாலை விபத்துக்களை முழுவதுமாக தடுக்க முடியாவிட்டாலும் கூட, அதை குறைக்கவாவது செய்யலாம்.

  அடிக்கடி ஏற்படும் இயற்கையின் சீற்றம், சரியான வடிவமைப்பு இல்லாத பராமரிக்கப்படாத சாலைகள், சாலைகளில் சரியான வெளிச்சமின்மை, வாகனங்கள் ஓட்டுபவர்களும் சாலைகளில் நடப்பவர்களும் சரியாக சாலை விதிகளை அறியாமலிருத்தல் போன்றவை முக்கிய காரணங்களாகின்றன. சில சமயங்களில் சாலை விதிகளை மீறி அதிவிரைவாக வண்டிகளை ஓட்டுதலும் விபத்துக்கு வழிவகுத்து விடுகிறது.

  வாகனங்களை சரியானபடி பராமரிக்காதது, அளவுக்கு அதிகமாய் பாரத்தை ஏற்றுதல், குடித்து விட்டு போதையில் ஓட்டவது போன்ற இன்னும் சில காரணங்கள் விபத்தை விரும்பி அழைத்து விடுகின்றன. சமீப காலங்களில் செல்போன்களில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுகிறார்கள். இது எமனுக்கு கொடுக்கும் அழைப்பாக இருக்கிறது.

  1899 செப்டம்பர் 13 நியூயோர்க் நகரில் ஹென்றி பிளிஸ் என்ற அமெரிக்கர் தான் முதன் முதலில் வாகன விபத்தில் பலியானவர். அவர் பயணித்த வாகனத்தில் இருந்து இறங்கி நின்றபோது அதன் பக்கமாக சென்ற வாகனம் அவர் மீது ஏறியதில் கொல்லப்பட்டார் என்பது செய்தி. இதுதான் உலகத்தில் முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட வாகன விபத்து.

  உலகளவில் இன்று மரண எண்ணிக்கை சாலை விபத்துக்களின் மூலம் உயர்ந்து கொண்டே போகிறது. சாலைகளில் தினமும் 280 பேர் இறக்கின்றனர். 2006 இல் இப்படி இறந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 15 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள். நான்கில் ஒரு பகுதியினர் பாதசாரிகள்.

  பருவ மழை மற்றும் புயல் காலங்களில் சாலைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. குண்டும் குழியுமாய் காட்சியளிக்கும் சாலைகள் வானங்களை திக்கு முக்காடச் செய்து விபத்துக்கள் நடப்பதற்கு ஏதுவாகிறது. மலைப் பாதைகளில் நிலச்சரிவு மற்றும் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கும் காலகட்டங்களில் விழிப்புடன் செயல்பட்டால் பெரும்பாலான விபத்துக்களை தடுக்கலாம்.

  சாலை ஓரங்களில் குறிப்பிட்ட இடங்களில் தொலைபேசி வசதிகள், முதலுதவிச் சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டு அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும். முதலுதவி செய்யப் பட்டு அவசர மற்றும் தீவிர சிகிச்சை பெற பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்ல வசதியாக வாகனங்கள் அந்த மையங்களில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

  பெரும்பாலான விபத்துக்கள் பஸ் படிக்கட்டுகள் பயணத்தாலே ஏற்படுகின்றன. சீன நாட்டில் பஸ்களில் கதவு மூடிய பிறகே பஸ்களை எடுக்க வேண்டும் என்பது கட்டாயம்.

  தொலைதூர பேரூந்துகளில் றைவருக்கு பக்கவாட்டில் உட்கார்ந்து பயணம் செய்வோர் தூங்கிக் கொண்டே சென்றால் றைவரும் அவருடன் சேர்ந்து தூங்க வழிவகுக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் பஸ் கொண்டக்டர் தூங்கும் பயணிகளை பின்னால் வந்து உட்காரச் சொல்ல வேண்டும்.

  நீண்ட சாலைகளில் இரவு நேரம் சைக்கிளில் தொழிற்சாலைகளுக்கு சென்று திரும்புவோரின் உருவம் கனரக வாகனங்களில் உள்ள கண்கூசும் விளக்குகளினால் றைவருக்கு தெரியாமல் போக வாய்ப்பு அதிகம். இதனால் நிறைய விபத்துக்கள் ஏற்பட ஏதுவாகிறது. இதை தவிர்க்க சைக்கிளில் மஞ்சள் வர்ணம் பூச அறிவுறுத்த வேண்டும்.

  by, www.99likes.blogspot.com

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.