கீழக்கரை கிழக்குத்தெரு முஸ்லீம் பஜார் அருகில் ரிபாய் தைக்கா எதிர்புறம் கீழக்கரை கஸ்டம்ஸ் ரோட்டை சேர்ந்த சதக்கத்துல்லா மகன் நூருல் அமீன் வாடகை பாத்திர கடை நடத்தி வந்தார்.இவர் சமையல் பணிகளை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தார்.இந்நிலையில் தனது வாடிக்கையாளரிடம் பெறப்பட்ட ரூ 1 லட்சத்தை கடையில் வைத்து விட்டு சென்றாராம்.மறுநாள் காலையில் கடை திறக்க சென்ற போது கடையின் பூட்டு உடைக்கபட்டு ரூ 1 லட்சத்தை காணவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த கடைகாரர் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து டி.எஸ்.பி சோம சேகர்,ஏடி.எஸ்.பி உமையாள்,இன்ஸ்பெக்டர் கனேஷன்,சப் இன்ஸ்பெக்டர் கோபால் ஆகியோர் பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
நமது இளைஞர்கள் ஒன்றுக்கும் உதவாத வேலைகளுக்கெல்லாம் பைக்கில் ராம்நாடு செல்வதை தவிர்க்கவேண்டும்.விவேகமாக செயல்படவேண்டும்.
ReplyDelete