Saturday, September 8, 2012

கீழக்கரை 9வது வார்டு பகுதியில் ஆபத்தான நிலையில் மின்சார டிரான்ஸ்பார்மர்!ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கோரிக்கை!





கீழக்கரை 9 வது வார்டுக்குட்பட்ட பழைய குத்பா பள்ளி தெரு பகுதியில் ஜெட்டி பாலம் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார‌ ட்ரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் சிமெண்ட் தூண் உடைந்து விழும் நிலையில் உள்ளது.இத‌னால் டிரான்ஸ்பார்ம‌ர் கீழே விழும் நிலை ஏற்பட்டு பெரும் ஆப‌த்தை எதிர்நோக்கியுள்ள‌து.

இது பற்றி முன்னாள் 9 வார்டு கவுன்சிலர் கிதுர் கூறியதாவது ,

இந்த டிரான்ஸ் பார்மர் அடிக்கடி பழுதாகிறது.மேலும் இதன் போஸ்ட் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது எனவே உடைந்து பெரும் விபத்து ஏற்படும் முன் உடனடியாக மின் இலாகா நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும் என்றார்

கீழக்கரையில் தொடரும் சிறு திருட்டுக்கள்!மர்ம ஆசாமிகள் சுற்றுவதாக‌ பீதி !



கீழக்கரையில் கடந்த சில மாதங்களாக திறந்துள்ள வீடுகளில் புகுந்து திருடும் மர்ம ஆசாமிகளால் பீதி ஏற்பட்டுள்ளது.காலை மற்றும் பகல் நேரங்களிலும் இச்சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

வீட்டில் உள்ளவர்கள் சமையல் செய்வது உள்ளிட்ட வேறு பணிகளில் கவனம் திசை இருக்கும் போது திறந்துள்ள வீட்டுக்குள் செல்லும் மர்ம ஆசாமிகள் கையில் கிடைக்கும் பொருள்களை (லேப்டாப்,சுவர் கடிகாரம்,செல்போன்)உள்ளிட்டவைகளை திருடி செல்வ‌தாக‌ குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌டுகிற‌து.எனவே வீட்டிலுள்ளவர்கள் கவனத்துடன் செயல்படுவதோடு காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



இது குறித்து சேகு சத‌க் இப்ராகிம் கூறிய‌தாவது,

சென்ற வாரம் கீழ‌க்க‌ரையில் திறந்திருந்த‌ ஒரு வீட்டில் புகுந்து ஜன்னலோரம் இருந்த‌ ப‌ர்ஸ் உள்ளிட்ட‌ பொருட்க‌ளை அடையாள‌ம் தெரியாத‌ ஆசாமிக‌ள் திருடி சென்று விட்ட‌ன‌ர்.ப‌ர்சில் பாங்க் ஏடிஎம் கார்டு மற்றும் சிறித‌ள‌வு ப‌ண‌மும் இருந்துள்ள‌து.வீட்டிலுள்ள‌வ‌ர்க‌ள் உட‌ன‌டியாக‌ ஏடிஎம் கார்டை பிளாக் செய்து விட்டு காவ‌ல்துறையில் புகார் அளிக்காம‌ல் இருந்து விட்டார்க‌ள். கீழ‌க்க‌ரையில் சில‌ இட‌ங்க‌ளில் இது போன்ற‌ சிறு சிறு திருட்டுக்க‌ள் ந‌டைபெற்று வருகிறது.மர்ம ஆசாமிகள் குழுவாக சுற்றி திரிகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.பொதுமக்கள் சிறிய‌ அள‌விலான‌ திருட்டுதானே என்று காவ‌ல்துறையில் புகார் அளிக்காம‌ல் இருந்து விடுகிறார்க‌ள்.இது திருடுப‌வ‌ர்க‌ளுக்கு வ‌ச‌தியாக‌ போய் விடுகிற‌து.என‌வே சம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் காவ‌ல்துறையில் புகார் அளிக்க‌ வேண்டும்.காவ‌ல்துறையும் ந‌ட‌வ‌டிக்கை எடுத்து ம‌க்க‌ளின் அச்ச‌த்தை போக்க‌ வேண்டும்.















Friday, September 7, 2012

கீழக்கரை நகராட்சியின் பலகையில் பழைய தகவல்களை மாற்றியமைத்து புதிய பலகை அமைக்க வேண்டுகோள்!




கீழக்கரை நகராட்சி அலுவலக வாயிலில் கீழக்கரை குறித்த தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.அதில் கீழக்கரை தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்த போது உள்ள தகவல்களே இன்றும் உள்ளது.பலகையின் மேல் பகுதியில் மட்டும் மூன்றாம்நிலை நகராட்சி என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சுலைமான் கூறியதாவது,

கீழக்கரையில் மக்கள்தொகை,கடைகள்,சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இவை அனைத்தும் அதிகரித்துள்ளது எனவே அதற்கேற்ப தகவல்களை மாற்றம் செய்து புதிய தகவல் பலகையை அமைக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு வேண்டும்.இதன் மூலம் கீழக்கரை நகராட்சி குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.


செய்தி : சேகு சதக் இப்ராகிம்

கீழக்கரை நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் திருமண நிகழ்ச்சி !(படங்கள்)






கீழ‌க்க‌ரை தெற்குதெரு ப‌குதி 17வ‌து வார்டு க‌வுன்சில‌ர் ஆனா மூனா என்றழைக்கப்படும் முகைதீன் காதர் சாஹிபுக்கு நேற்று இரவு திருமணம் ந‌டைபெற்ற‌து.முன்னதாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் கவுன்சிலர்கள் சார்பாகவும் மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியின் இள‌ம் வ‌ய‌து க‌வுன்சில‌ர் இவ‌ர் என்ப‌து குறிப்பிட‌த‌க்க‌து.

ஆசிரியர் பற்றாக்குறை!போராட்டத்தில் இறங்கிய பெரியப்பட்டினம் பள்ளி மாணவர்கள்!



வகுப்புகளை புறக்கணித்து

மாணவர்கள் போராட்டம்

பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை


கீழக்கரை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில், பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழக்கரை அருகே பெரியபட்டினத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 1 வகுப்பில் 70 பேர், பிளஸ் 2வில் 55 பேர் என 124 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இந்த வகுப்புகளில் கம்ப்யூட்டர் மற்றும் இயற்பியல் பாடங்கள் நடத்த மட்டுமே ஆசிரியர்கள் உள்ளனர். பிற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.

எனவே போதிய ஆசிரியர்களை நியமிக்க மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். காலாண்டு தேர்வு வருகிற 12ம் தேதி துவங்குகிறது. இந்நிலையிலும், பாடங்களை நடத்த ஆசிரியர்கள் நியமிக்கப்படாததை கண்டித்து நேற்று காலை 10 மணியளவில் மாணவ, மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளஸ் 1 மாணவர் ஆதில், பிளஸ் 2 மாணவர் அன்சாரி ஆகியோர் கூறுகையில், �காலாண்டு தேர்வு நெருங்கும்வேளையில் இதுவரை பாடங்கள் எதையும் நடத்தவில்லை. நாங்கள் எப்படி தேர்வு எழுதப்போகிறோம் எனத் தெரியவில்லை. நிரந்தர தலைமை ஆசிரியரும் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகமும் பல ஆண்டாக அமைக்கவில்லை. இந்த மூன்று கோரிக்கைகளை முன்வைத்துதான் வகுப்பு புறக்கணிப்பு நடத்தப்படுகிறது� என்றனர்.

மாணவர்களின் போராட்டம் குறித்து தகவலறிந்து மதியம் 12 மணியளவில் ராமநாதபுரம் கல்வி மாவட்ட அலுவலர் லத்திகா, பள்ளிக்கு வந்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவின்படி உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்� என்று கூறி மாணவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பினர்.

பெரியபட்டினம் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் சட்டமன்ற தொகுதி தலைவர் பைரோஸ்கான் கூறுகையில், �இந்த கோரிக்கைகளை ஒரு வாரத்திற்குள் அரசு நிறைவேற்றாவிடில் எங்கள் கட்சியும் மாணவர்களுடன் இணைந்து பெரிய அளவில் போராட்டம் நடத்தும்� என்றார்.

Thursday, September 6, 2012

மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் இஸ்லாமியா பள்ளிகள் கோப்பையை வென்றது!


இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி

இஸ்லாமியா உயர்நிலை பள்ளி

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற வாலிபால் போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி அணியினர் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான கோப்பையை கைப்பற்றினர்.

வெற்றி பெற்ற மாணவ அணியினரை பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம், கல்விக்குழு உறுப்பினர்கள் காசீம், ஜமால் இபுராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ்,நிர்வாக அலுவலர் மலைச்சாமி உள்ளிட்ட பலர் பாராட்டி
னர்.
பட விளக்கம்:-மாவட்ட அளவில் வெற்றிபெற்ற இஸ்லாமியா மெட்ரி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாண‌வ‌ர்க‌ளுடன் ப‌ள்ளியின் முத‌ல்வ‌ர் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ள்

கீழக்கரை தாசிம்பீவி கல்லூரியில் 1000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற‌ பொருட்காட்சி சந்தை !




கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் 2012 -13 ஆண்டிற்கான உள்ளாட்சி துறைக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் 100 கல்லூரிகளில் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்களின் கண்காட்சி நடத்தப்படும் என்ற‌ அறிவிப்பின் அடிப்படையில் பொருட்காட்சி நடைபெற்றது.


தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலான்மை இயக்குநரின் வழிகாட்டுதல் நெறிமுறையின் படி மாவட்ட மகளிர் திட்டம் சார்பாக கல்லூரிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் தயாரிப்புகளை சந்தை படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பிபிஏ பிபிஎம் எம்பிஏ மாணவிகளின் உதவியோடு சந்தைப்படுத்தவும் ,பொருள்களுக்கு தர நிர்ணயம், விலை நிர்ணயம்,உறையிடுதல், மற்றும் மதிப்பு கூட்டல் போன்ற இனங்களில் திட்ட அறிக்கை தயாரித்திட இக்கல்லூரி சந்தை நடத்தப்படுகிறது.

இக்க‌ண்காட்சியில் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா தலைமை வ‌கித்தார்.ம‌க‌ளிர் திட்ட‌ அலுவ‌ல‌ர் அய்ய‌ம்பெருமாள் துவ‌க்கி வைத்தார்.சீத‌க்க‌தி அற‌க்க‌ட்ட‌ளை துணை பொது மேலாள‌ர் சேக் தாவுத்,ஜோச‌ப் ஆகியோர் வியாபாரத்தை தொட‌ங்கி வைத்த‌ன‌ர்.

இந்நிக‌ழ்வில் 1000த்துக்கு அதிகமானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.





கீழக்கரையில் கோழிக‌டைக‌ளில் கோழிக‌ழிவுக‌ளை அக‌ற்றும் ப‌ணி தொட‌ங்கியது!உரமாக்க திட்டம் !




கீழக்கரையில் சேரும் குப்பைகளில் மூன்று ஒரு பங்கு கோழி கழிவு என கூறப்படுகிறது.நகரில் நோய் பரவுவதற்கு கோழி கழிவுகள் ஒரு காரணம் என எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கீழக்கரை நகராட்சி மற்றும் வெல்பேர் அஸோசியேசன் ,யூத் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கோழி கழிவுகளை உரமாக்க திட்டம் தீட்டியது.

இத‌ற்காக‌ கோழிக‌டை உரிமையாள‌ர்க‌ளை அழைத்து பேச்சு வார்த்தை ந‌ட‌த்தி கோழி க‌ழிவுக‌ளை வெளியில் வீச‌ கூடாது.குப்பை எடுக்கும் வாக‌ன‌த்தில் தான் த‌ர‌ வேண்டும்என‌ ந‌க‌ராட்சி சார்பில் அறிவுறுத்த‌ப்ப‌ட்ட‌து.

இதனடிப்படையில் கோழிகறி விற்பனை கடைகளுக்கே நேரில் சென்று கோழி கழிவுகளை எடுத்து செல்லும் ப‌ணி தொட‌ங்க‌ப்ப‌ட்டு தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ளின்
பணியாளர்களால் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

வெல்பேர் அசோசிய‌சன் மற்றும் யூத் எக்ஸ்னோரா ஆகியவற்றுக்கு கோழி கழிவுகளை க‌டைக‌ளிலிருந்து அக‌ற்றுவ‌த‌ற்கு தேவையான் உப‌க‌ர‌ண‌ங்க‌ளான‌ டிரை சைக்கிள்,குப்பை தொட்டிக‌ள்,ம‌ற்றும் கைஉரை,முக‌ உரை உள்ளிட்டவை கீழக்கரை நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது குறிப்பிட‌த‌க்க‌து.


கீழக்கரை முஸ்லிம் பொதுநல சங்க இளைஞர்கள் முயற்சியில் திறந்தவெளி கால்வாய்க்கு சிமெண்ட் மூடி !




ப‌ட‌ விள‌க்க‌ம் உடைந்த‌ மூடி அக‌ற்ற‌ப்ப‌ட்டு புதிய‌ சிமெண்ட் மூடி அமைக்க‌ப்ப‌ட்டுள்ளது.


கீழக்கரை 17வது வார்டில் புது தெருவில் கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்த நிலையில் திறந்த வண்ணம் இருந்தது இதனால் அவ்வழியே செல்பவர்கள் குறிப்பாக இரவு நேரங்களில் தவறி விழும் வாய்ப்பு இருந்து வந்தது.இது பற்றி வார்டு உறுப்பினர் ஆனா மூனா என்ற காதர் சாஹிப் சார்பில் பல முறை நகராட்சியிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இறுதியாக நகராட்சி மூலம் சிமெண்ட் மூடி அமைக்க டெண்டர் கோரப்பட்டது.ஆனாலும் மூடி அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.தொடந்து தாமதமாகி வந்தது.

உடனடியாக சிமெண்ட் மூடி அமைக்க வேண்டிய அவசியம் கருதி தெற்கு தெரு முஸ்லிம் பொது நல சங்க இளைஞர்களும் வார்டு உறுப்பினரும் இணைந்து தாங்களே கால்வாய் மூடிகளை அமைத்தனர்.இத‌ன் மூல‌ம் அப்ப‌குதியில் நீண்ட‌ கால‌மாக‌ நிலவி
பிரச்சனை முடிவுக்கு வந்தது.

தொடரும் மின்சார விபத்து !கீழ‌க்கரை தெற்குதெரு பகுதியில் மின்க‌ம்பியில் தீப்ப‌ற்றிய‌து !



கீழக்கரை தெற்குதெரு சொக்கநாதர் கோவில் அமைந்துள்ள பகுதியில் இன்று இரவு 10 . 30 மணியளவில் மின்சார கம்பி தீ பற்றி அறுந்து விழுந்தது. இத‌னால் அப்ப‌குதியில் ப‌ர‌ப‌ர‌ப்பு ஏற்ப‌ட்டது.உட‌ன‌டியாக அங்கிருந்தவ‌ர்க‌ள் த‌க‌வ‌ல் கொடுத்த‌தின் பேரில் மின் ஊழிய‌ர்க‌ள் ப‌ழுது பார்த்த‌ன‌ர்.இத‌னால் அப்ப‌குதி முழுவ‌து இருளில் முழ்கிய‌து.

இது குறித்து ச‌த‌க் இப்ராகிம் கூறுகையில்,

அப்பகுதியில் ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர்.இறைவ‌ன் அருளால் அறுந்து விழுந்த மின் கம்பியால் யாருக்கும் பாதிப்பில்லை.தொட‌ர்ந்து இதுபோன்ற‌ விப‌த்துக்க‌ள் ந‌டைபெறுகிற‌து.கீழ‌க்க‌ரை முழுவதும் பழைய மின்க‌ம்பிக‌ளை புதிய மின்க‌ம்பிக‌ளை நிறுவ‌ வேண்டும் என்றார்

Wednesday, September 5, 2012

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் நூற்றுக்கணக்கான மாணவ,மாணவியருக்கு விலையில்லா காலணி!


கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் பள்ளி மாணவியருக்கான விலையில்லா காலணிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான‌ பள்ளி மாணவிகள் பயனடைந்தனர்.

இதற்கான நிகழ்ச்சி கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் செய்யது இபுராகிம் (ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு) தலைமை வகித்தார்.

கிழக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் பசீர் அகமது, பொருளாளர் ஹாஜா அனீஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் தாளாளர் டாக்டர் சாதிக், கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மாலின் செயலாளர். முகைதீன் தம்பி,பள்ளியின் தலைமை ஆசிரியர் முகம்மது மீரா, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் உறுப்பினர் மற்றும் மக்கள் நல பாதுகாப்புக் கழக செயலாளர் முகைதீன் இப்ராகிம், பொருளாளர் சாலிஹ் ஹுசைன் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர். இதில் நகர் நல இயக்கத்தின் நிர்வாகிகள் இராஜேந்திரன், விஜயன், கெஜி என்கிற கெஜேந்திரன், கவுன்சிலர்கள் இடி மின்னல் ஹாஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tuesday, September 4, 2012

கீழ‌க்கரை மின்சார பிரச்சனை குறித்து அமைச்ச‌ரிட‌ம் ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ புகார் !


மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று (03.09.2012) இரவு 10 மணி அளவில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வாதனை அமைச்சருடைய இல்லத்தில் சந்தித்து கீழக்கரை மின்சாரப் பிரச்சனை தொடர்பாக சில கோரிக்கை கடிதங்களை வழங்கினார்,

அக்கடிதங்களில் குறிப்பிட்டுள்ளதாவது :

1. கீழக்கரையில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் அலுவலகம் ஊருக்கு வெளியே அமைந்திருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக ஊருக்கு வெளியே செல்ல வேண்டிய நிலை இருந்தது. இப்பிரச்சனையால் பொது மக்கள் மிகவும் சிரமம் அடைந்த காரணத்தால் கீழக்கரை பேருந்து நிலையத்தில் அருகில் மின்சாரக் கட்டணம் செலுத்த புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது.

2. அதேபோல் கீழ்க்கரையில் 10 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஒன்றை நிறுவி இதுவரை மின் இணைப்பு தாராமல் உள்ளது.

3. மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க சரியான தொலைபேசி எண்ணும் இல்லாமல் உள்ளது.

எனவே செயல்பாடாமல் உள்ள மின்கட்டண அலுவலகத்தை உடனே செயல்படுத்தவும் புதிய மின்மாற்றியை இயக்கவும், மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்னை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு க‌டித‌த்தில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ளது


கீழ‌க்க‌ரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ரசீது இல்லாதோருக்கு தேசிய அடையாள அட்டைக்கான‌ போட்டோ எடுக்க‌ மறுப்பு!



மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவிற்கான ரசீது இல்லாதோருக்கு தேசிய அடையாள அட்டைக்கான போட்டோ எடுக்க மறுக்கப்படுவதால் கீழக்கரை மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட் டம் கீழக்கரை நகராட்சியிலுள்ள 21 வார்டுகளில் தேசிய அடையாள அட்டைக்கான போட்டோ எடுக்கும் பணி ஆக.30ல் துவங்கியது. கடந்த 2ம் தேதி வரை 1, 2, 6 வார்டுகளைச் சேர்ந்தோருக்கு மறவர் தெரு தொடக்கப்பள்ளியில் போட்டோ எடுக்கப்பட்டது.

ரேஷன் கார்டு, வாக் காளர் அடையாள அட் டையை உடன் எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட் டது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிழக்குதெரு கைரத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் 3, 4, 5 வார்டுகளை சேர்ந்தோர் போட்டோ எடுக்கச் சென்றபோது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒப்புகை ரசீது இல்லாதவர்கள் திரும்பி அனுப்பபட்டனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த அடையாள அட்டைக்கு போட்டோ எடுக்க மறுக்கப்பட்டதால் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

3வது வார்டு பகுதியை சேர்ந்த சீனி உம்மா என்பவர் கூறுகையில் ,கணக்கெடுப்பு ரசீது எடுத்து வர வேண்டும் என்று எவ்வித முன்னறிவிப்பும் இல்லை.மேலும் எங்கள் பகுதியில் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை.யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை .கணக்கெடுப்பில் ரசீது இல்லாதவர்கள் எப்படி தேசிய அடையாள அட்டை பெறுவது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்


இது குறித்து ஹபீப் என்பவர் கூறுகையில், கணக்கெடுப்புக்கான ரசீது இல்லாதோறுக்கு புகைபடம் எடுக்க முடியாது என மறுக்கின்றனர்.ஆனால் என்னிடம் ரசீது உள்ளது ஆனால் அரசின் பதிவில் இடம்பெறவில்லை எனவே புகைப்படம் எடுக்க முடியாது என மறுத்து விட்டனர்.இது என்னுடைய‌ தவறு இல்லை கணக்கெடுப்பை எடுத்தவர்கள் அரசின் பதிவேடில் என் பெயரை பதிவு செய்யவில்லை.இப்படி ஏராளமான குளறுபடி உள்ளது.இவை அனைத்தையும் சரி செய்து முறையான‌ அறிவிப்பு வெளியிட்டு தேசிய அடையாள அட்டைக்கான முகாமின் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் மேலும் கூடுதல் ஊழியர்களையும் தன்னார்வ தொண்டர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றார்

இது குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்பார்வையாளர் கார்த்திக் கூறுகையில்,

‘2010 பிப்ரவரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் வீடு தோறும் ரசீது கொடுக்கப்பட்டது. அந்த ரசீது உள்ளவர்களுக்கு மட்டும் தற்போது போட்டோ எடுக்கப்படுகிறது. போட்டோ எடுக்கத் தவறியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும். கணக்கெடுப்பின் போது ஒப்புகை சீட்டு பெறாதவர்கள் மீண்டும் சிறப்பு முகாமில் பெயர் இல்லை என உறுதி செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

புதிதாக பதிவு செய்யும் குடும்பங்களுக்கு முகாமில் போட்டோ எடுக்கப்பட மாட்டாது. 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அறி விப்பு செய்து போட்டோ எடுக்கப்படும். ரேஷன் கார்டு, வாக்காளர் அடை யாள அட்டை தவிர பாஸ் போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு போன்ற போட்டோ ஒட்டிய ஆவணங்களை கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம்’ என்றார்.






ராமநாதபுரம் பல்திறன் போட்டிகளில் பரிசுகளை அள்ளிய கீழக்கரை இஸ்லாமியா பள்ளி!




ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் "யூத் மேளா 2012' பல்திறன் போட்டி நடந்தது. "வேர்டு பவர்' வினாடி வினா போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் ஜென்னத் நிஸா ஹைருன் ஹபிலா, சுமையா அல் சாஹிதா முதல் பரிசையும், இப்பள்ளி மாணவி ருபைலா, மாறுவேடப் போட்டியில் மூன்றாம் பரிசையும் பெற்றார்.

ராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில் நடந்த, பாரதியார் 92வது நினைவு நாள் பேச்சுப் போட்டியில் மாணவி இக்ஸாஸ் ரூக்ஸியா இரண்டாம் பரிசையும், மாணவி செய்யது அல் நிஷானா மூன்றாம் பரிசையும், பாரதியார் வேடமணிந்த மாணவி சிஜா ஹிமைராவும் சிறப்பு பரிசையும் பெற்றார்.

இவர்களை, பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம், கல்விக்குழு உறுப்பினர்கள் காசீம், ஜமால் இபுராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ்,நிர்வாக அலுவலர் மலைச்சாமி ஆகியோர் பாராட்டினர்.


Monday, September 3, 2012

சுகாதார சீர்கேட்டில் 18வது வார்டு! கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் மீது குற்ற‌ச்சாட்டு!






கீழக்கரை நகராட்சி 18வ‌து வார்டுக்குட்ட‌ப‌ட்ட கட்டாளிம்ஷா பங்களா எதிர்புறம் உள்ளிட்ட ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் க‌ழிவுநீர் கால்வாய் உடைந்து க‌ழிவு நீர் சாலையில் ஓடுகிற‌து.மேலும் சில‌ இட‌ங்க‌ளில் குப்பைக‌ள் தெருக்க‌ளில் வீடுக‌ள் அதிக‌முள்ள‌ ப‌குதிக‌ளில் சேர்ந்து குப்பை மேடாக‌ காட்சிய‌ளிக்கிற‌து.இது குறித்து இப்பகுதியின் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஹ‌னீப் சூபியான் உள்ளிட்ட‌ இளைஞ‌ர்க‌ள் கூறிய‌தாவ‌து,

இப்ப‌குதியில் குப்பைகள் மற்றும் கழிவுநீரால் மிகுந்த‌ சுகாதார‌ சீர் கேடு ஏற்ப‌ட்டுள்ள‌து.பள்ளிக்குழந்தைகள் இவ்வழியேதான் நடந்து செல்கின்றனர்.எனவே உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இது குறித்து க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் எவ்வித‌ நட‌வ‌டிக்கையும் மேற்கொள்ள‌வில்லை.ந‌க‌ரின் சுகாதார‌ம் குறித்து அக்க‌றை செலுத்தும் இவர் முதலில் த‌ன‌து வார்டில் உள்ள‌ குறைக‌ளை தீர்க்க‌ வேண்டும்.பிற‌கு ஊர் ந‌ல‌னில் அக்க‌றை செலுத்த‌லாம் என்றார்.

இது குறித்து கவுன்சிலர் முகைதீன் இப்ராகிமிட‌ம் கேட்ட‌ போது,
க‌ழிவு கால்வாய்க‌ளுக்கு விரைவில் மூடி அமைக்க‌ப்ப‌டும்.சிமெண்ட் மூடிக‌ள் தயாராகி வ‌ருகிற‌து.குப்பை பிர‌ச்ச‌னையை ந‌க‌ராட்சியிட‌ம் எடுத்து சொல்லி தீர்வு காண்பேன்.வார்டுக்குட்பட்ட‌ ப‌குதிக‌ளில் சுகாதார‌ம் குறித்த‌ ப‌ல்வேறு ஏற்பாடுகளை செய்து வ‌ருகிறேன்.குறைகளை சுட்டிகாட்ட விரும்புவர்கள் என‌து மொபைலிலும்(9443358305) அழைக்க‌லாம் என்றார்.




கீழக்கரை பாலிடெக்னிக் ரோட்ராக்ட் புதிய‌ நிர்வாகிகள் தேர்வு !




கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ரோட்ராக்ட் புதிய நிர்வாகிகளாக பாலிடெக்னிக் மாணவர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் அலாவுதீன் தலைமை வகித்தார்.ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா,தலைவர் ரமேஷ் பாபு கல்லூரி தாளாளர் யூசுப் சாகிப் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

தலைவராக தவ்பீக் அலி, செயலாளராக ஆசிக் முஸ்தபா,உதவி தலைவராக பழனியப்பன்,இணை செயலாளர் வீரர் அப்துல்லா,பொருளாளர் முகம்மது ரபீக்,இயக்குநர்களாக சதாம் ஹுசைன்,யஹியா சுலைமான்,அப்துல் அஜீஸ் மற்றும் சீனி ராவுத்தர்,முகம்மது யாசிக் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்று கொண்டனர்.

ஜெயகுமார்,சேக் தாவுத்,மரியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பட்டய தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் ரோட்ராக்ட் மாணவர்கள் செய்திருந்தனர்.

கீழ‌க்க‌ரை பாதாள‌ சாக்க‌டை திட்டம் மற்றும் தனி தாலுகா!ம‌ம‌க‌ கூட்ட‌த்தில் தீர்மான‌ம்!





மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு, கடல் அட்டை, சங்கு மீதான தடை நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.

மாவட்ட தலைவர் சாதிக்பாட்சா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்வர்அலி, பொருளாளர் வாணி சித்திக், துணைத்தலைவர் செய்யது காசிம், துணை செயலாளர்கள் பாலகிருஷ்ணன், அஜீஸ்ரகுமான், த.மு.மு.க துணை செயலாளர்கள் சாதிக் அமீன், அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் வரவேற்றார்.



அரசு அறிவிப்போடு முடங்கிப்போன கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகாவை உருவாக்கும் ஆணையை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும்

இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மேற்கண்ட இரு நகராட்சிகளையும் தூய்மை பெற துரித நடவடிக்கை எடுக்குமாறும்

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்து தமிழக மீனவர்களுக்கு பெரும் துரோகம் இழைத்த மத்திய அரசு, கச்சத்தீவை மீட்டு தமிழகத்தின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும்.

இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கக் கூடாது. இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த மற்றும் காயமடைந்த மீனவர்கள் குடும்பத்திற்கு இலங்கை அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும். பொய்வழக்கு போட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 5 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. உரை அடங்கிய சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதனை மாநில தலைவர் ரிபாயி வெளியிட்டார்.

கூட்டத்தில் மாநில செயலாளர் கோவை செய்யது, மாநில அமைப்பு செயலாளர்கள் மைதீன்உலவி, ஜோசப்நொலஸ்கோ, மன்னை செல்லச்சாமி, மருத்துவ அணி செயலாளர் கிதிர்முகம்மது. ம.தி.மு.க. நிர்வாகி பாம்பன் பெட்ரிக் பேசினர். நகர் தலை வர் சுல்த்தான் நன்றி கூறினார்.

தொடரும் நடவடிக்கை! கீழ‌க்கரை கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்த அரிய‌ இனமான‌ 'க‌ட‌ல் விசிறி" ப‌றிமுத‌ல்!




கடல்வாழ் உயிரனங்களுக்கு மன்னார் வளைகுடா பகுதி சொர்க்க பூமியாக திகழ்கிறது உலகில் அரிய கடல் வாழ் உயிரனங்கள் வாழு இடங்களி மன்னார் வளைகுடா கடல் பகுதியும் ஒன்றாகும். கீழக்கரை கடல் பகுதி மன்னார் வளைகுடாவின் ஒரு பகுதியாகும்.

நீண்ட‌ காலமாக‌ இப்ப‌குதியில் க‌ட‌ல் வ‌ள‌ங்க‌ள் அழிக்க‌ப்ப‌டுவ‌தாக‌ குற்ற‌ச்சாட்டு நில‌வி வ‌ருகிற‌து.இத‌ற்காக அரசாங்கத்தால் ப‌ல் வேறு கடலோர‌ காவ‌ல் ப‌டைக‌ள் அமைக்க‌ப்ப‌ட்டு தீவிர‌மாக‌ இப்ப‌குதி க‌ண்காணிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

நேற்று ப‌வ‌ள‌ப்பாறைக‌ளை வெட்டி க‌டத்த முய‌ன்ற‌தாக‌ கீழ‌க்க‌ரையில் மூன்று பேர் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.இந்நிலையில் இன்று காலை 18வாலிபர் தர்ஹா அருகில் உள்ள கடற்கரை பகுதியில் மிக‌ அரிய‌ வ‌கை இன‌மான "க‌ட‌ல் விசிறி" 8க்கும் மேற்ப‌ட்ட‌ மூடைக‌ளில் புதைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து வனத்துறையினரால் க‌ண்டுபிடிக்க‌ப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த கடல் விசிறிகள் கட‌த்துவ‌த‌ற்காக‌ புதைக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என வ‌ன‌த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.யார் இதை புதைத்தனர்.தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக அரிய‌ கடல் வாழ் உயிரனங்கள் பறிமுதல் செய்யப்ட்டிருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.இப்பகுதியில் கடல் வளம் அழிக்கப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து அதிகாரிகள் கீழக்கரை கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.


அரிய உயிரினம் தான் "கடல் விசிறி'.
கடலின் அடியில் மட்டுமே வாழும் இவை ஓரே இடத்தில் நின்று வளரும் தன்மை கொண்டவை. சல்லடை போல தோற்றம் கொண்ட இந்த உயிரினம், நீர் வழியே கடந்து செல்லும் சிறிய உயிரினங்களை உண்டு வாழும். சல்லடை வழியே வடிகட்டி உண்பது இதன் தனிச்சிறப்பு. ஆண்டுக்கு ஒரு செ.மீ., குறைவான வளர்ச்சியே இவற்றுக்கு உண்டு. இவற்றின் உருவ அமைப்பை பார்க்கும் வளர்ச்சியை பெற குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும். இதனால் இவை நீண்ட நாள் வளரும் உயிரினமாகிறது. கடலின் அடியில் இருக்கும் இதன் உருவ அமைப்பு மீன் உற்பத்தி, நண்டு, சிப்பிகள் இனப்பெருக்கத்துக்கு பேருதவியாக உள்ளது. கடல் அடியில் கலங்கம் ஏற்படாமல் இருக்க "கடல் விசிறி'கள் பங்கு முக்கியமானதாகும்.

பவளப்பாறை யை யொட்டிய பகுதியில் தான் இவை காணப்படும். இவற்றின் மருத்துவ குணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் தற்போதும் நடந்து வருகிறது.மடிவலையில் சிக்கி இவ்வினம் அழிந்து வருவதாக ஏற்கெனவெ கடல் வாழ் ஆர்வலர்கள் கூறி வரும் நிலையில் இது போன்று கடத்தலுக்காக அழிக்கப்பட்டு வருவது மிகவும் வேதனைக்குறியது என தெரிவிக்கின்றனர்.
கடல் விசிறி பற்றி குறிப்பு: எஸ்.ஞான சேகர்




பவளபாறைகளை வெட்டி எடுத்தாக கீழக்கரையில் 3பேர் கைது !




ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மன்னார் வளைகுடா கடல் பகுதி உள்ளது.இக்கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளது,மன்னார் வளைகுடாவில் பவளப்பாறைகள்,கடற்குதிரைகள்,கடற்பாசிகள்,அட்டைகள், திமிங்கலங்கள்,ஆமைகள் உள்ளிட்ட 3600க்கும் மேற்பட்ட உயிரினங்கள்.மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரனங்களின் சொர்க்கம் என கூறப்படுகிறது.இங்கு அரிய கடல் வாழ் உயிரினங்கள் வேட்டையாடுவது,பவளப்பாறைகளை வெட்டி எடுப்பது போன்றவை அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற வாய்ப்புள்ளது.

இந்நிலையில் கீழக்கரை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பவள்ப்பாறைளை வெட்டி எடுத்து கடத்த போவதாக தனிபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனடிப்படையில் தனிப்பிரிவு எஸ் ஐ ஜேம்ஸ்,ஏட்டு செல்வராஜ் கீழக்கரை எஸ் ஐ கார்மேகம் ஆகியோர் ரோந்து சென்று சந்தேகத்தின் அடிப்படையில் நல்ல இப்ராகிம்(45)சங்கர்(23),சுப்ரமணியன்(29) ஆகியோரை விசாரனை செய்ததில் அழகு சாதன பொருட்கள் பயன்படும் பவளப்பாறைகளை வெட்டி எடுத்து பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது .இதனையடுத்து 8 மூடை 4 அட்டைபெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த பவளப்பாறைகளை பறிமுதல் செய்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Sunday, September 2, 2012

கீழக்கரையில் நாளை (03-9)காலை9 மணி முதல் மாலை5 30 மணி வரை மின் தடை



கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கீழக்கரை, ஏர்வாடி, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, உத்தரகோசமங்கை, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் திங்கள்கிழமை(செப் 03) காலை 9 மணி முதல் மாலை 5 30 மணி வரை மின் தடை ஏற்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.



கீழக்கரை முழுவதும் சுகாதாரத்தை வலியுறுத்தி பிளக்ஸ் போர்டுகள் அமைக்க ஏற்பாடு!






கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பில் அதன் நிர்வாகிகளான கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம்,சாலிஹ் ஹுசைன்,பாபா பக்ரூதீன் உள்ளிட்டோர் சுகாதாரத்தை வலியுறுத்தி தாங்களே முன் வந்து நகரில் குப்பைகள் நிறைந்துள்ள பகுதிகளில் விளம்பர போர்டுகள் நிறுவி வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது,

பல்வேறு இடங்களில் ஒவ்வொன்றாக நிறுவி வருகிறோம்.நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் இது போன்ற சுகாதாரத்தை வலியுறுத்தி விளம்பர போர்டுகளை ஏற்படுத்த உள்ளோம் இதன் மூலம் மக்களுக்கு சிறிதேனும் பயன் கிடைத்தாலும் மகிழ்ச்சிதான். ஒத்துழைப்பு அளிக்கும் கீழக்கரை நகராட்சிக்கும் நன்றி என்றனர்.

Saturday, September 1, 2012

கழிவுநீர் கால்வாய் பணியில் விதிமுறை மீறல்! போக்குவரத்து தடையால் பொது மக்கள் அவதி !



கீழக்கரையில் நகராட்சி சார்பாக வள்ளல் சீதக்காதி சாலை பகுதியில் ரூ 50 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது.இப்பணிக்காக‌ சாலையோரத்தில் ஜேசிபி பயன்படுத்தி பள்ளம் தோண்டப்படுகிறது.இதனால் பி.எஸ்.என்.எல் வயர்கள் அறுபட்டு சுமார் 400க்கு அதிகமான தொலை தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் ஜேசிபி வைத்து தோண்டகூடாது என்ற அரசின் விதிமுறையை மீறி செயல்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும் எவ்வித முன்னறிவிப்பின்றி போக்கு வரத்து அதிகமுள்ள காலை நேரத்தில் ஜேசிபியை நடுரோட்டில் நிறுத்தி வேலை செய்வதால் அப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த நெய்னார் கூறுகையில் ,

போக்குவரத்து அதிகமில்லாத இரவு நேரத்தில் இப்பணியை மேற்கொள்ளலாம். ஜேசிபி பயன்படுத்தாமல் ஆட்களை பயன்படுத்த வேண்டும்.மேலும் அருகில் அரசு மருத்துவமனை உள்ளதால் இப்பகுதியில் வாகனத்தில் வருபவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.நகராட்சி தலையிட்டு காண்டிராக்டரை கண்டித்து விதிமீறலை தடுக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ஹமீது கான் கூறியதாவது,மழைநீர் வாறுகாலுக்கு பயன்படுத்த வேண்டிய நிதியை கழிவுநீர் கால்வாய்க்கு பயன்படுத்துவது முறையல்ல.மேலும் இந்த காண்டிராக்டர் முற்றிலும் சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படுகிறார் என்றார்.

தொலை தொடர்பு துறை அதிகாரிகள் கூறியதாவது ,

நகராட்சியில் இருந்து இப்பணி குறித்து எவ்வித தகவலும் எங்களுக்கு இல்லை.துண்டிக்கப்பட்ட அனைத்து இணைப்புகளும் சரி செய்யப்படும் என்றன‌ர்.



கீழக்கரை வடக்குதெரு ஜமாத் புதிய நிர்வாகிகள் தேர்வு!


ஜமாத் தலைவராக அக்பர்கான்

செயலாளராக முகைதீன் இப்ராகிம் என்ற தம்பி வாப்பா,

பொருளாளராக மொய்தீன்


கீழக்கரை வடக்குதெரு ஜமாத் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

ஜமாத் தலைவராக அக்பர்கான் ,செயலாளராக முகைதீன் இப்ராகிம் என்ற தம்பி வாப்பா,பொருளாளராக மொய்தீன்,

துணை தலைவர்களாக முகம்மது ஜாகிர் ஹுசைன், அகமது மிர்ஷா,

உதவி செயலாளர்களாக சகாப்தீன் ,ஜகுபர் அலி,

நிர்வாக குழு உறுப்பினர்களாக மவுலா முகைதீன், அகமது நிஷார்,நஜீப்கான்,பாதுஷா,முகைதீன் சீனி அலி, நசீர் அகமது, அப்துல்லா ஆப்தீன் காதர் ஹுசைன்,ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



வரலாற்று சிறப்பு மிக்க ஊர் கீழக்கரை!கொடியேற்றி அப்துல் ரஹ்மான்.எம்பி பேச்சு








கீழ‌க்க‌ரை ந‌க‌ர‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் சார்பில் 30.08.2012 வியாழ‌க்கிழ‌மை மாலை தாய்ச்ச‌பையின் ப‌ச்சிள‌ம் பிறைக்கொடியேற்று விழா ந‌டைபெற்ற‌து. இராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் ஹாஜி வ‌ருசை முஹ‌ம்ம‌து த‌லைமை வ‌கித்தார். மாநில‌ பொருளாள‌ரும், மாவ‌ட்ட‌ச் செய‌லாள‌ருமான‌ எம்.எஸ்.ஏ. ஷாஜ‌ஹான் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். கீழ‌க்க‌ரை ட‌வுண் காஜி ஏ.எம்.எம். காத‌ர் ப‌க்ஷ் ஹுசைன் சித்திக்கீ துஆ ஓதினார். காயிதெமில்ல‌த் பேர‌வையின் சர்வ‌தேச‌ ஒருங்கிணைப்பாள‌ரும், வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ருமான‌ எம். அப்துல் ர‌ஹ்மான் ப‌ச்சிள‌ம் பிறைக்கொடியினை ஏற்றி வைத்தார்.

கீழக்கரை வரலாற்று சிறப்பு நிறைந்தது.இவ்வூரை சேர்ந்த பெரியவர்கள் பலர் முஸ்லீம் லீக்கின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள்.இ
‌ண்ணிய‌த்திற்குரிய‌ காயிதெமில்ல‌த், சிராஜுல் மில்ல‌த், முனீருல் மில்ல‌த் உள்ளிட்ட‌ தாய்ச்ச‌பையின் த‌லைவ‌ர்க‌ள் தாய்ச்ச‌பை கொடியினை ஏற்றிய‌ இட‌த்தில் இன்று நாமும் ஏற்றியுள்ளோம். பிற கொடிக‌ளுக்கும், தாய்ச்ச‌பையின் கொடிக்கும் உள்ள‌ வேறுபாட்டை யாவ‌ரும் அறிந்து கொள்ள‌ வேண்டும்.

முஸ்லிம் லீக் த‌னித்த‌ன்மையுட‌ன் கூடிய‌ ஒரு இய‌க்க‌ம். இளைஞ‌ர்க‌ள் அனைவ‌ரும் இவ்விய‌க்க‌த்தை வ‌லுப்ப‌டுத்தி ச‌முதாய‌த்தின் க‌ண்ணிய‌த்தையும், ஐக்கிய‌த்தையும் காக்க‌ முன்வ‌ர‌வேண்டும் என்றார்.

ந‌க‌ரின் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் வ‌ருசை முஹ‌ம்ம‌து, செய‌லாள‌ர் ஷாஜஹான், அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை த‌லைவ‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி, பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா உள்ளிட்டோர் பிறைக்கொடியினை ஏற்றி வைத்த‌ன‌ர்.

நிக‌ழ்வில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை பொருளாள‌ர் ஹ‌மீதுர் ர‌ஹ்மான், துபை ம‌ண்ட‌லச் செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ துணைத்த‌லைவ‌ர்க‌ள் க‌ம‌ருஸ் ஸ‌மான், சாதுல்லா கான், துணைச் செய‌லாள‌ர் முஹ‌ம்ம‌து யாக்கூப், க‌ட‌லாடி ஒன்றிய‌ அமைப்பாள‌ர் எம். அப்துல் ல‌த்தீப், மாவ‌ட்ட‌ மாண‌வ‌ர‌ணி த‌லைவ‌ர் எஸ். சிராஜ்தீன், துணைத் த‌லைவ‌ர் அப்துல் ஹ‌மீது, செய‌லாள‌ர் லெப்பை த‌ம்பி, மாவட்ட‌ உல‌மாக்க‌ள் அணி அமைப்பாள‌ர் யூனுஸ் ஆலிம், கட‌லாடி ஒன்றிய‌ துணை அமைப்பாள‌ர் ந‌த்த‌ர்ஷா, ஒப்பிலான் பிரைம‌ரி த‌லைவ‌ர் காத‌ர்க‌னி, வாலிநோக்க‌ம் பிரைம‌ரி த‌லைவ‌ர் காத‌ர் மீராசா, செய‌லாள‌ர் முகைதீன் அப்துல் காத‌ர், கீழ‌க்க‌ரை ந‌க‌ர் இளைஞ‌ர‌ணி ம‌ற்றும் மாண‌வ‌ர‌ணி அமைப்பாள‌ர் எஸ்.ஏ. முஹ‌ம்ம‌து அஃப்ரோஸ் கான், எம்.எஸ்.எஃப் த‌லைவ‌ர் எம் முஹ‌ம்ம‌து இர்ஃபான், துணைத்த‌லைவ‌ர் கே. அபுப‌க்க‌ர் சித்தீக், ந‌க‌ர் அமைப்பாள‌ர் முஹ‌ம்ம‌து ஆசிஃப், செய‌லாள‌ர் ஏ. இலியாஸ் அஹ‌ம‌து யாக்கூப், துணைச்செய‌லால‌ர் ஏ வாசிப் ம‌ரைக்கா, ஆர். ச‌பீக் ர‌ஹ்மான், ந‌க‌ர் இளைஞ‌ர‌ணி த‌லைவ‌ர் எம். லெப்பைத் த‌ம்பி என்ற‌ மாஸ்ட‌ர், ந‌க‌ர‌ காயிதெமில்ல‌த் பேர‌வை த‌லைவ‌ர் அபூப‌க்க‌ர் சாஹிப், செய‌லாள‌ர் ஏ. அப்துல் ஸ‌லாம், இராம‌நாத‌புர‌ம் ந‌க‌ர் மாண‌வ‌ர‌வ‌ணி அமைப்பாள‌ர் ச‌லாவுதீன், செயலாள‌ர் அசிம், ராஜா முஹ‌ம்ம‌து, அஹ‌ம‌து அலி, ச‌தாம் உசேன், இணை செய‌லாள‌ர் மோக‌ன் உள்ளிட்ட‌ தாய்ச்ச‌பையின‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.