Tuesday, September 4, 2012

கீழ‌க்கரை மின்சார பிரச்சனை குறித்து அமைச்ச‌ரிட‌ம் ஜ‌வாஹிருல்லா.எம்.எல்.ஏ புகார் !


மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று (03.09.2012) இரவு 10 மணி அளவில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வாதனை அமைச்சருடைய இல்லத்தில் சந்தித்து கீழக்கரை மின்சாரப் பிரச்சனை தொடர்பாக சில கோரிக்கை கடிதங்களை வழங்கினார்,

அக்கடிதங்களில் குறிப்பிட்டுள்ளதாவது :

1. கீழக்கரையில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் அலுவலகம் ஊருக்கு வெளியே அமைந்திருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக ஊருக்கு வெளியே செல்ல வேண்டிய நிலை இருந்தது. இப்பிரச்சனையால் பொது மக்கள் மிகவும் சிரமம் அடைந்த காரணத்தால் கீழக்கரை பேருந்து நிலையத்தில் அருகில் மின்சாரக் கட்டணம் செலுத்த புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது.

2. அதேபோல் கீழ்க்கரையில் 10 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஒன்றை நிறுவி இதுவரை மின் இணைப்பு தாராமல் உள்ளது.

3. மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க சரியான தொலைபேசி எண்ணும் இல்லாமல் உள்ளது.

எனவே செயல்பாடாமல் உள்ள மின்கட்டண அலுவலகத்தை உடனே செயல்படுத்தவும் புதிய மின்மாற்றியை இயக்கவும், மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்னை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு க‌டித‌த்தில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ளது


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.