Tuesday, September 4, 2012

ராமநாதபுரம் பல்திறன் போட்டிகளில் பரிசுகளை அள்ளிய கீழக்கரை இஸ்லாமியா பள்ளி!




ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் "யூத் மேளா 2012' பல்திறன் போட்டி நடந்தது. "வேர்டு பவர்' வினாடி வினா போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் ஜென்னத் நிஸா ஹைருன் ஹபிலா, சுமையா அல் சாஹிதா முதல் பரிசையும், இப்பள்ளி மாணவி ருபைலா, மாறுவேடப் போட்டியில் மூன்றாம் பரிசையும் பெற்றார்.

ராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில் நடந்த, பாரதியார் 92வது நினைவு நாள் பேச்சுப் போட்டியில் மாணவி இக்ஸாஸ் ரூக்ஸியா இரண்டாம் பரிசையும், மாணவி செய்யது அல் நிஷானா மூன்றாம் பரிசையும், பாரதியார் வேடமணிந்த மாணவி சிஜா ஹிமைராவும் சிறப்பு பரிசையும் பெற்றார்.

இவர்களை, பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம், கல்விக்குழு உறுப்பினர்கள் காசீம், ஜமால் இபுராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ்,நிர்வாக அலுவலர் மலைச்சாமி ஆகியோர் பாராட்டினர்.


1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 4, 2012 at 6:29 PM

    இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் மாணவி செல்வங்களின் அபார வெற்றிக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    இவர்களை திறம்பட ஊக்குவித்த பள்ளி தாளாளர் மற்றும் கல்விக்குழு அன்பர்களுக்கும் அனைவருக்கும் அன்னவர்களின் இது போன்ற சேவைகள் மேன்மேலும் சிறக்க சீரிய வாழ்த்துகள்.

    நிகழ்ச்சியின் புகைப்பட நகல்களை இணத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.