கீழக்கரை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 30.08.2012 வியாழக்கிழமை மாலை தாய்ச்சபையின் பச்சிளம் பிறைக்கொடியேற்று விழா நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி வருசை முஹம்மது தலைமை வகித்தார். மாநில பொருளாளரும், மாவட்டச் செயலாளருமான எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் வரவேற்புரை நிகழ்த்தினார். கீழக்கரை டவுண் காஜி ஏ.எம்.எம். காதர் பக்ஷ் ஹுசைன் சித்திக்கீ துஆ ஓதினார். காயிதெமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் பச்சிளம் பிறைக்கொடியினை ஏற்றி வைத்தார்.
கீழக்கரை வரலாற்று சிறப்பு நிறைந்தது.இவ்வூரை சேர்ந்த பெரியவர்கள் பலர் முஸ்லீம் லீக்கின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள்.இ
ண்ணியத்திற்குரிய காயிதெமில்லத், சிராஜுல் மில்லத், முனீருல் மில்லத் உள்ளிட்ட தாய்ச்சபையின் தலைவர்கள் தாய்ச்சபை கொடியினை ஏற்றிய இடத்தில் இன்று நாமும் ஏற்றியுள்ளோம். பிற கொடிகளுக்கும், தாய்ச்சபையின் கொடிக்கும் உள்ள வேறுபாட்டை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் லீக் தனித்தன்மையுடன் கூடிய ஒரு இயக்கம். இளைஞர்கள் அனைவரும் இவ்வியக்கத்தை வலுப்படுத்தி சமுதாயத்தின் கண்ணியத்தையும், ஐக்கியத்தையும் காக்க முன்வரவேண்டும் என்றார்.
நகரின் பல்வேறு இடங்களில் மாவட்ட தலைவர் வருசை முஹம்மது, செயலாளர் ஷாஜஹான், அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் பிறைக்கொடியினை ஏற்றி வைத்தனர்.
நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் பேரவை பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், துபை மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத், ராமநாதபுரம் மாவட்ட துணைத்தலைவர்கள் கமருஸ் ஸமான், சாதுல்லா கான், துணைச் செயலாளர் முஹம்மது யாக்கூப், கடலாடி ஒன்றிய அமைப்பாளர் எம். அப்துல் லத்தீப், மாவட்ட மாணவரணி தலைவர் எஸ். சிராஜ்தீன், துணைத் தலைவர் அப்துல் ஹமீது, செயலாளர் லெப்பை தம்பி, மாவட்ட உலமாக்கள் அணி அமைப்பாளர் யூனுஸ் ஆலிம், கடலாடி ஒன்றிய துணை அமைப்பாளர் நத்தர்ஷா, ஒப்பிலான் பிரைமரி தலைவர் காதர்கனி, வாலிநோக்கம் பிரைமரி தலைவர் காதர் மீராசா, செயலாளர் முகைதீன் அப்துல் காதர், கீழக்கரை நகர் இளைஞரணி மற்றும் மாணவரணி அமைப்பாளர் எஸ்.ஏ. முஹம்மது அஃப்ரோஸ் கான், எம்.எஸ்.எஃப் தலைவர் எம் முஹம்மது இர்ஃபான், துணைத்தலைவர் கே. அபுபக்கர் சித்தீக், நகர் அமைப்பாளர் முஹம்மது ஆசிஃப், செயலாளர் ஏ. இலியாஸ் அஹமது யாக்கூப், துணைச்செயலாலர் ஏ வாசிப் மரைக்கா, ஆர். சபீக் ரஹ்மான், நகர் இளைஞரணி தலைவர் எம். லெப்பைத் தம்பி என்ற மாஸ்டர், நகர காயிதெமில்லத் பேரவை தலைவர் அபூபக்கர் சாஹிப், செயலாளர் ஏ. அப்துல் ஸலாம், இராமநாதபுரம் நகர் மாணவரவணி அமைப்பாளர் சலாவுதீன், செயலாளர் அசிம், ராஜா முஹம்மது, அஹமது அலி, சதாம் உசேன், இணை செயலாளர் மோகன் உள்ளிட்ட தாய்ச்சபையினர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.