கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் 2012 -13 ஆண்டிற்கான உள்ளாட்சி துறைக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் 100 கல்லூரிகளில் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்களின் கண்காட்சி நடத்தப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் பொருட்காட்சி நடைபெற்றது.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலான்மை இயக்குநரின் வழிகாட்டுதல் நெறிமுறையின் படி மாவட்ட மகளிர் திட்டம் சார்பாக கல்லூரிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் தயாரிப்புகளை சந்தை படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பிபிஏ பிபிஎம் எம்பிஏ மாணவிகளின் உதவியோடு சந்தைப்படுத்தவும் ,பொருள்களுக்கு தர நிர்ணயம், விலை நிர்ணயம்,உறையிடுதல், மற்றும் மதிப்பு கூட்டல் போன்ற இனங்களில் திட்ட அறிக்கை தயாரித்திட இக்கல்லூரி சந்தை நடத்தப்படுகிறது.
இக்கண்காட்சியில் கல்லூரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார்.மகளிர் திட்ட அலுவலர் அய்யம்பெருமாள் துவக்கி வைத்தார்.சீதக்கதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் சேக் தாவுத்,ஜோசப் ஆகியோர் வியாபாரத்தை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் 1000த்துக்கு அதிகமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.