Thursday, September 6, 2012
கீழக்கரையில் கோழிகடைகளில் கோழிகழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது!உரமாக்க திட்டம் !
கீழக்கரையில் சேரும் குப்பைகளில் மூன்று ஒரு பங்கு கோழி கழிவு என கூறப்படுகிறது.நகரில் நோய் பரவுவதற்கு கோழி கழிவுகள் ஒரு காரணம் என எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கீழக்கரை நகராட்சி மற்றும் வெல்பேர் அஸோசியேசன் ,யூத் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கோழி கழிவுகளை உரமாக்க திட்டம் தீட்டியது.
இதற்காக கோழிகடை உரிமையாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி கோழி கழிவுகளை வெளியில் வீச கூடாது.குப்பை எடுக்கும் வாகனத்தில் தான் தர வேண்டும்என நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனடிப்படையில் கோழிகறி விற்பனை கடைகளுக்கே நேரில் சென்று கோழி கழிவுகளை எடுத்து செல்லும் பணி தொடங்கப்பட்டு தொண்டு நிறுவனங்களின்
பணியாளர்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வெல்பேர் அசோசியசன் மற்றும் யூத் எக்ஸ்னோரா ஆகியவற்றுக்கு கோழி கழிவுகளை கடைகளிலிருந்து அகற்றுவதற்கு தேவையான் உபகரணங்களான டிரை சைக்கிள்,குப்பை தொட்டிகள்,மற்றும் கைஉரை,முக உரை உள்ளிட்டவை கீழக்கரை நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
வரவேற்கிறோம். திட்டம் தொய்வில்லாமல் செயல்பட வேண்டுகிறேம்.
ReplyDelete