Saturday, September 8, 2012

கீழக்கரையில் தொடரும் சிறு திருட்டுக்கள்!மர்ம ஆசாமிகள் சுற்றுவதாக‌ பீதி !



கீழக்கரையில் கடந்த சில மாதங்களாக திறந்துள்ள வீடுகளில் புகுந்து திருடும் மர்ம ஆசாமிகளால் பீதி ஏற்பட்டுள்ளது.காலை மற்றும் பகல் நேரங்களிலும் இச்சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

வீட்டில் உள்ளவர்கள் சமையல் செய்வது உள்ளிட்ட வேறு பணிகளில் கவனம் திசை இருக்கும் போது திறந்துள்ள வீட்டுக்குள் செல்லும் மர்ம ஆசாமிகள் கையில் கிடைக்கும் பொருள்களை (லேப்டாப்,சுவர் கடிகாரம்,செல்போன்)உள்ளிட்டவைகளை திருடி செல்வ‌தாக‌ குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌டுகிற‌து.எனவே வீட்டிலுள்ளவர்கள் கவனத்துடன் செயல்படுவதோடு காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



இது குறித்து சேகு சத‌க் இப்ராகிம் கூறிய‌தாவது,

சென்ற வாரம் கீழ‌க்க‌ரையில் திறந்திருந்த‌ ஒரு வீட்டில் புகுந்து ஜன்னலோரம் இருந்த‌ ப‌ர்ஸ் உள்ளிட்ட‌ பொருட்க‌ளை அடையாள‌ம் தெரியாத‌ ஆசாமிக‌ள் திருடி சென்று விட்ட‌ன‌ர்.ப‌ர்சில் பாங்க் ஏடிஎம் கார்டு மற்றும் சிறித‌ள‌வு ப‌ண‌மும் இருந்துள்ள‌து.வீட்டிலுள்ள‌வ‌ர்க‌ள் உட‌ன‌டியாக‌ ஏடிஎம் கார்டை பிளாக் செய்து விட்டு காவ‌ல்துறையில் புகார் அளிக்காம‌ல் இருந்து விட்டார்க‌ள். கீழ‌க்க‌ரையில் சில‌ இட‌ங்க‌ளில் இது போன்ற‌ சிறு சிறு திருட்டுக்க‌ள் ந‌டைபெற்று வருகிறது.மர்ம ஆசாமிகள் குழுவாக சுற்றி திரிகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.பொதுமக்கள் சிறிய‌ அள‌விலான‌ திருட்டுதானே என்று காவ‌ல்துறையில் புகார் அளிக்காம‌ல் இருந்து விடுகிறார்க‌ள்.இது திருடுப‌வ‌ர்க‌ளுக்கு வ‌ச‌தியாக‌ போய் விடுகிற‌து.என‌வே சம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் காவ‌ல்துறையில் புகார் அளிக்க‌ வேண்டும்.காவ‌ல்துறையும் ந‌ட‌வ‌டிக்கை எடுத்து ம‌க்க‌ளின் அச்ச‌த்தை போக்க‌ வேண்டும்.















No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.