Monday, September 3, 2012
சுகாதார சீர்கேட்டில் 18வது வார்டு! கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் மீது குற்றச்சாட்டு!
கீழக்கரை நகராட்சி 18வது வார்டுக்குட்டபட்ட கட்டாளிம்ஷா பங்களா எதிர்புறம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாய் உடைந்து கழிவு நீர் சாலையில் ஓடுகிறது.மேலும் சில இடங்களில் குப்பைகள் தெருக்களில் வீடுகள் அதிகமுள்ள பகுதிகளில் சேர்ந்து குப்பை மேடாக காட்சியளிக்கிறது.இது குறித்து இப்பகுதியின் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஹனீப் சூபியான் உள்ளிட்ட இளைஞர்கள் கூறியதாவது,
இப்பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவுநீரால் மிகுந்த சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது.பள்ளிக்குழந்தைகள் இவ்வழியேதான் நடந்து செல்கின்றனர்.எனவே உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இது குறித்து கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.நகரின் சுகாதாரம் குறித்து அக்கறை செலுத்தும் இவர் முதலில் தனது வார்டில் உள்ள குறைகளை தீர்க்க வேண்டும்.பிறகு ஊர் நலனில் அக்கறை செலுத்தலாம் என்றார்.
இது குறித்து கவுன்சிலர் முகைதீன் இப்ராகிமிடம் கேட்ட போது,
கழிவு கால்வாய்களுக்கு விரைவில் மூடி அமைக்கப்படும்.சிமெண்ட் மூடிகள் தயாராகி வருகிறது.குப்பை பிரச்சனையை நகராட்சியிடம் எடுத்து சொல்லி தீர்வு காண்பேன்.வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரம் குறித்த பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறேன்.குறைகளை சுட்டிகாட்ட விரும்புவர்கள் எனது மொபைலிலும்(9443358305) அழைக்கலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
நேறறுதான் தங்களைப் பற்றி உயர்வாக எழுதி இருந்தோம்.. இன்றைய செய்தி அது பற்றி யோசிக்க வைத்து விட்டது..
ReplyDeleteவார்டு வாரியாக அதற்கென்று தனித்தனியாக மக்கள் பிரதிநிதிகள் உண்டு. அவர்கள் அவர்களின் கடமையை செய்வார்கள்..
நகரை சுற்றி பிறகு பார்ப்போம். முதலில் தங்களை நம்பி ஓட்டளித்த சொந்த வார்டு மக்களின் அபிலாஷைகளை , எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்வதை தலையாய கடமையாக கொள்ளுங்கள்..
வாறுகால் மூடும் பணி அடுத்து வரட்டும். முதலில் குப்பைகள அகற்றுவதோடு, வாறுகால் அடைப்புகளை நீக்குங்கள்.தாங்கள் மனது வைத்து உடனடியாக இதை சீர் செய்ய முடியும். செய்வீர்கள் என நம்புகிறோம்.
உலகம் முழுவதும் பரவி இருக்கும் கீழக்கரை வாசிகள் கீழ்க்கரை டைம்ஸை உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.. (அதன் TOTAL PAGE VIEWERS எண்ணிக்கையை கவனித்தாலே அது புரியும்)..இன்றைய செய்தியில் 18-வது வார்டின் சுகாதார சீர்கேட்டின் அவல நிலையின் புகைபட நகல் பதிவுகளை காண்பவர்க்கு வேதனை தான் மிஞ்சும்..இப்படி பட்டவரையா நாம் தேர்ந்தெடுத்தோம் என வருத்தபடுவதற்கு முன் துரித நடவடிக்கை எடுத்து செயல் படுங்கள். வெற்றி உமதாகட்டும்.வாழ்த்துக்கள்.