Monday, September 3, 2012

பவளபாறைகளை வெட்டி எடுத்தாக கீழக்கரையில் 3பேர் கைது !




ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மன்னார் வளைகுடா கடல் பகுதி உள்ளது.இக்கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளது,மன்னார் வளைகுடாவில் பவளப்பாறைகள்,கடற்குதிரைகள்,கடற்பாசிகள்,அட்டைகள், திமிங்கலங்கள்,ஆமைகள் உள்ளிட்ட 3600க்கும் மேற்பட்ட உயிரினங்கள்.மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரனங்களின் சொர்க்கம் என கூறப்படுகிறது.இங்கு அரிய கடல் வாழ் உயிரினங்கள் வேட்டையாடுவது,பவளப்பாறைகளை வெட்டி எடுப்பது போன்றவை அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற வாய்ப்புள்ளது.

இந்நிலையில் கீழக்கரை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பவள்ப்பாறைளை வெட்டி எடுத்து கடத்த போவதாக தனிபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனடிப்படையில் தனிப்பிரிவு எஸ் ஐ ஜேம்ஸ்,ஏட்டு செல்வராஜ் கீழக்கரை எஸ் ஐ கார்மேகம் ஆகியோர் ரோந்து சென்று சந்தேகத்தின் அடிப்படையில் நல்ல இப்ராகிம்(45)சங்கர்(23),சுப்ரமணியன்(29) ஆகியோரை விசாரனை செய்ததில் அழகு சாதன பொருட்கள் பயன்படும் பவளப்பாறைகளை வெட்டி எடுத்து பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது .இதனையடுத்து 8 மூடை 4 அட்டைபெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த பவளப்பாறைகளை பறிமுதல் செய்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.