கடல்வாழ் உயிரனங்களுக்கு மன்னார் வளைகுடா பகுதி சொர்க்க பூமியாக திகழ்கிறது உலகில் அரிய கடல் வாழ் உயிரனங்கள் வாழு இடங்களி மன்னார் வளைகுடா கடல் பகுதியும் ஒன்றாகும். கீழக்கரை கடல் பகுதி மன்னார் வளைகுடாவின் ஒரு பகுதியாகும்.
நீண்ட காலமாக இப்பகுதியில் கடல் வளங்கள் அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.இதற்காக அரசாங்கத்தால் பல் வேறு கடலோர காவல் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக இப்பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேற்று பவளப்பாறைகளை வெட்டி கடத்த முயன்றதாக கீழக்கரையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் இன்று காலை 18வாலிபர் தர்ஹா அருகில் உள்ள கடற்கரை பகுதியில் மிக அரிய வகை இனமான "கடல் விசிறி" 8க்கும் மேற்பட்ட மூடைகளில் புதைக்கப்பட்டிருந்தது வனத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த கடல் விசிறிகள் கடத்துவதற்காக புதைக்கப்பட்டிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.யார் இதை புதைத்தனர்.தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக அரிய கடல் வாழ் உயிரனங்கள் பறிமுதல் செய்யப்ட்டிருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.இப்பகுதியில் கடல் வளம் அழிக்கப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து அதிகாரிகள் கீழக்கரை கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.
அரிய உயிரினம் தான் "கடல் விசிறி'.
கடலின் அடியில் மட்டுமே வாழும் இவை ஓரே இடத்தில் நின்று வளரும் தன்மை கொண்டவை. சல்லடை போல தோற்றம் கொண்ட இந்த உயிரினம், நீர் வழியே கடந்து செல்லும் சிறிய உயிரினங்களை உண்டு வாழும். சல்லடை வழியே வடிகட்டி உண்பது இதன் தனிச்சிறப்பு. ஆண்டுக்கு ஒரு செ.மீ., குறைவான வளர்ச்சியே இவற்றுக்கு உண்டு. இவற்றின் உருவ அமைப்பை பார்க்கும் வளர்ச்சியை பெற குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும். இதனால் இவை நீண்ட நாள் வளரும் உயிரினமாகிறது. கடலின் அடியில் இருக்கும் இதன் உருவ அமைப்பு மீன் உற்பத்தி, நண்டு, சிப்பிகள் இனப்பெருக்கத்துக்கு பேருதவியாக உள்ளது. கடல் அடியில் கலங்கம் ஏற்படாமல் இருக்க "கடல் விசிறி'கள் பங்கு முக்கியமானதாகும்.
பவளப்பாறை யை யொட்டிய பகுதியில் தான் இவை காணப்படும். இவற்றின் மருத்துவ குணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் தற்போதும் நடந்து வருகிறது.மடிவலையில் சிக்கி இவ்வினம் அழிந்து வருவதாக ஏற்கெனவெ கடல் வாழ் ஆர்வலர்கள் கூறி வரும் நிலையில் இது போன்று கடத்தலுக்காக அழிக்கப்பட்டு வருவது மிகவும் வேதனைக்குறியது என தெரிவிக்கின்றனர்.
கடல் விசிறி பற்றி குறிப்பு: எஸ்.ஞான சேகர்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.