Tuesday, September 4, 2012
கீழக்கரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ரசீது இல்லாதோருக்கு தேசிய அடையாள அட்டைக்கான போட்டோ எடுக்க மறுப்பு!
மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவிற்கான ரசீது இல்லாதோருக்கு தேசிய அடையாள அட்டைக்கான போட்டோ எடுக்க மறுக்கப்படுவதால் கீழக்கரை மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட் டம் கீழக்கரை நகராட்சியிலுள்ள 21 வார்டுகளில் தேசிய அடையாள அட்டைக்கான போட்டோ எடுக்கும் பணி ஆக.30ல் துவங்கியது. கடந்த 2ம் தேதி வரை 1, 2, 6 வார்டுகளைச் சேர்ந்தோருக்கு மறவர் தெரு தொடக்கப்பள்ளியில் போட்டோ எடுக்கப்பட்டது.
ரேஷன் கார்டு, வாக் காளர் அடையாள அட் டையை உடன் எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட் டது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிழக்குதெரு கைரத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் 3, 4, 5 வார்டுகளை சேர்ந்தோர் போட்டோ எடுக்கச் சென்றபோது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒப்புகை ரசீது இல்லாதவர்கள் திரும்பி அனுப்பபட்டனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த அடையாள அட்டைக்கு போட்டோ எடுக்க மறுக்கப்பட்டதால் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
3வது வார்டு பகுதியை சேர்ந்த சீனி உம்மா என்பவர் கூறுகையில் ,கணக்கெடுப்பு ரசீது எடுத்து வர வேண்டும் என்று எவ்வித முன்னறிவிப்பும் இல்லை.மேலும் எங்கள் பகுதியில் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை.யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை .கணக்கெடுப்பில் ரசீது இல்லாதவர்கள் எப்படி தேசிய அடையாள அட்டை பெறுவது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்
இது குறித்து ஹபீப் என்பவர் கூறுகையில், கணக்கெடுப்புக்கான ரசீது இல்லாதோறுக்கு புகைபடம் எடுக்க முடியாது என மறுக்கின்றனர்.ஆனால் என்னிடம் ரசீது உள்ளது ஆனால் அரசின் பதிவில் இடம்பெறவில்லை எனவே புகைப்படம் எடுக்க முடியாது என மறுத்து விட்டனர்.இது என்னுடைய தவறு இல்லை கணக்கெடுப்பை எடுத்தவர்கள் அரசின் பதிவேடில் என் பெயரை பதிவு செய்யவில்லை.இப்படி ஏராளமான குளறுபடி உள்ளது.இவை அனைத்தையும் சரி செய்து முறையான அறிவிப்பு வெளியிட்டு தேசிய அடையாள அட்டைக்கான முகாமின் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் மேலும் கூடுதல் ஊழியர்களையும் தன்னார்வ தொண்டர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றார்
இது குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்பார்வையாளர் கார்த்திக் கூறுகையில்,
‘2010 பிப்ரவரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் வீடு தோறும் ரசீது கொடுக்கப்பட்டது. அந்த ரசீது உள்ளவர்களுக்கு மட்டும் தற்போது போட்டோ எடுக்கப்படுகிறது. போட்டோ எடுக்கத் தவறியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும். கணக்கெடுப்பின் போது ஒப்புகை சீட்டு பெறாதவர்கள் மீண்டும் சிறப்பு முகாமில் பெயர் இல்லை என உறுதி செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
புதிதாக பதிவு செய்யும் குடும்பங்களுக்கு முகாமில் போட்டோ எடுக்கப்பட மாட்டாது. 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அறி விப்பு செய்து போட்டோ எடுக்கப்படும். ரேஷன் கார்டு, வாக்காளர் அடை யாள அட்டை தவிர பாஸ் போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு போன்ற போட்டோ ஒட்டிய ஆவணங்களை கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம்’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.