

கீழக்கரை நகராட்சி அலுவலக வாயிலில் கீழக்கரை குறித்த தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.அதில் கீழக்கரை தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்த போது உள்ள தகவல்களே இன்றும் உள்ளது.பலகையின் மேல் பகுதியில் மட்டும் மூன்றாம்நிலை நகராட்சி என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சுலைமான் கூறியதாவது,
கீழக்கரையில் மக்கள்தொகை,கடைகள்,சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இவை அனைத்தும் அதிகரித்துள்ளது எனவே அதற்கேற்ப தகவல்களை மாற்றம் செய்து புதிய தகவல் பலகையை அமைக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு வேண்டும்.இதன் மூலம் கீழக்கரை நகராட்சி குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
செய்தி : சேகு சதக் இப்ராகிம்
பார்ப்போம். இந்த விஷயத்திலாவது நகராட்சி நிர்வாகம் துடிப்புடன் செயல் படுகிறதா என்று ??
ReplyDelete