Monday, June 4, 2012

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு ! இஸ்லாமியா பள்ளிகள் சாதனை ! 480 மதிப்பெண்கள் பெற்று மாணவி முதலிட‌ம் !



எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியாயின .இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி ஹபீஷா கீழக்கரை அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

அதே பள்ளி மாணவி வ‌ர்ஷினி 478 மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை அளவில் 2ம் இடம் பெற்றுள்ளார்.
ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவி ஹாஜரா 477 மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை அளவில் 3ம் இடம் பெற்றுள்ளார்.


இஸ்லாமியா பள்ளிகள்,தீனியா பள்ளி,
மஹ்தூமியா பள்ளி,ஹமீதியா பெண்கள் பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சி சாதனை படைத்துள்ளது.


ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் ஹாஜரா 477/500 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 94சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.

ஹமீதியா ஆண்கள் உயர்நிலை பள்ளியில் 417/500 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 93சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.


ஹமீதியா பெண்கள் பள்ளியில் 453/500 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 100சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.

முஹைதீனியா மெட்ரிக் பள்ளியில் பாத்திமா லூப்னா 464/500 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 94சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.

ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலை பள்ளி மாணவர் ஹிக்மத்துல்லா 436 பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.

மஹ்தூமியா பள்ளியில் 450/500 அதிக‌ மதிப்பெண்ணாகவும் 100சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.

தீனியா பள்ளியிலும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது

இஸ்லாமியா மெட்ரி பள்ளியில் 85 பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்வு பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

மாணவி ஹபீஷா 480/500 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.478 மதிப்பெண்கள் பெற்று வ‌ர்ஷினி 2ம் இடம் பெற்றுள்ளார். இஷ்ர‌த் பாத்திமா 476 பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார்.


இஸ்லாமியா உயர்நிலை பள்ளியில் 62 பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்வு பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி பாத்திமா சிபியா 458 பெற்று முதலிடம் பெற்றுள்ளார். முறையே 457 மற்றும் 447 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் ,மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.

1 comment:

  1. This is my first time visit at here and i am in fact pleassant to read all at alone place.



    Feel free to surf to my homepage cheap social bookmark

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.