Friday, November 2, 2012

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி கூட்ட‌த்தில் வாயில் க‌ருப்பு துணியுட‌ன் திமுக‌ ம‌ற்றும் சுயேச்சை க‌வுன்சில‌ர்க‌ள்!!


கீழக்கரை நகர்மன்ற கூட்டம் தலைவர் ராவியத்துல்கதரியா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன், கமிஷனர் முகமது முகைதீன் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் 3 பேர் மற்றும் சுயேட்சைகள் இருவர் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வந்தனர்.

ந‌க‌ராட்சி சார்பில் அ.தி.மு.க., நகர் செயலர் ராஜேந்திரன் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். துப்புரவு மேற்பார்வையாளர் மனோகரன் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர்மன்றத்தில் நடந்த விவாதத்தின் ஒரு ப‌குதி ‍‍‍ :-

இடிமின்னல்ஹாஜா (20வது வார்டு திமுக):-
 எனது வார்டில் குப்பை குவிந்து கிடக்கிறது. அதை ஏன் ஒருவாரமாக அகற்றவில்லை என மேஸ்திரி மனோகரனிடம் கேட்டேன். அதற்கு என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார் என நகராட்சி நிர்வாகத்திடம் பொய் புகார் செய்ததை விசாரிக்கவில்லை. போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. இதை கண்டிக்கிறோம்.என்றார்

மேலும் (மேஸ்திரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி இடிமின்னல்ஹாஜா, அருசியா (19வது வார்டு திமுக ) சாகுல்ஹமீது (5வது வார்டு திமுக ) மற்றும் சுயேச்சைகள் தங்கராஜ் (6வது வார்டு) முகைதீன்இபுராகிம் (18வது வார்டு) ஆகியோர் மீண்டும் கருப்புதுணியால் வாய்களை கட்டிக்கொண்டனர். இதனால், நகர்மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. (தொடர்ந்து விவாதம் நடந்தது
)
கவுன்சிலர் மஜிதாபீவி(15வதுவார்டு):-
 எனது வார்டில் சுகாதாரம் கேள்விகுறியாகிவிட்டது. குப்பை அகற்றி பல நாட்களாகிவிட்டது. சுற்றுச்சூழல் கடுமையாக பாதித்துள்ளது.

இடிமின்னல்ஹாஜா (20வது வார்டு):-
 கடந்த மார்ச் 22ல் நடந்த கூட்டத்தில் ஏற்கனவே ஜின்னா தெருவில் உள்ள பழைய கழிப்பறையை அகற்றி விட்டு புதிய கழிப்பறை கட்ட ரூ.6 லட்சத்திற்கு மன்றத்தின் அனுமதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. டெண்டர் விடப்பட்டு பணியும் முடிந்தது. தற்போது மீண்டும் கழிப்பறையை விரிவுபடுத்த ரூ.6 லட்சம் நிதி கேட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

பாவா செய்யதுகருணை (8வது வார்டு):-

 கிழக்குத்தெரு முகமதுகாசிம் அப்பா தர்கா பகுதியில் தீர்மானம் போடாத இடத்தில் வாறுகால் வாய்க்கால் கட்ட ஒருமாதத்திற்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் வாறுகால் பணி நடைபெறவில்லை. தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவில்லை. பள்ளி குழந்தைகளை ஏற்றி செல் லும் வாகனம், குடிநீர் வாக னம் என எந்த வாகனமும் அப்பகுதிக்குள் வர முடியவில்லை. எனது வார்டு பகுதியில் சிமென்ட சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. குடிநீர் குழாய் பதித்த பிறகே சிமென்ட் சாலை பணியை துவக்க வேண்டும்.

தலைவர்:‍‍ பள்ளம் மூட ஏற்பாடு செய்யப்படும். குடிநீர் குழாய் பதித்தபிறகே சாலை அமைக்கப்படும்.



முகைதீன் இபுராகிம்:   2012-2013 ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த தகவல் மன்ற பார்வைக்கு வைக்காமல், அரசு நிதியை வீணடிக்கும் வகையில், தன்னிச்சையாக பணிகளை தேர்வு செய்து இருப்பதை கண்டிக்கிறோம்
.
தலைவர்: ஏற்கனவே பணியாற்றிய கமிஷனர் மற்றும் ஒவர்சியர் திட்ட பணிகளை தேர்வு செய்து அனுப்பி உள்ளனர்.இதில் எங்கள் தலையீடு கிடையாது.

அஜ்மல்கான்: சேரான் தெருவில் குப்பை அள்ளாமல் அரை அடி நீளத்திற்கு, புழுக்கள் உள்ளது. நோயால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

தலைவர்:இரண்டு நாளில் கீழக்கரையில் குப்பை, அகற்றப்படும்.

ஹாஜா நஜ்முதீன்: கமிஷனர், ஒப்பந்ததாரரின் கைக்கூலியாக இருக்கக்கூடாது. திட்டப்பணிகளை முறைப்படுத்த தெரியவில்லை என்றால் இன்ஜி., கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து ஆலோசனை கேளுங்கள்.
ப‌ட‌ விள‌க்க‌ம்:‍கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் 2010ம் வ‌ருட‌ம் ரூ16 ல‌ட்ச‌ம் கொடுத்து வாங்கிய‌ ட‌ம்ப‌ர் பிளாச‌ர் ப‌யன்பாடு இல்லாம‌ல் ந‌கராட்சியில் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.இத‌ன் அருகே ப‌ழுதான‌ ந‌க‌ராட்சியின் டிராக்ட‌ர் ஒன்று நிறுத்த‌ப்ப‌ட்டு ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் ஆன‌தால் துரு பிடித்து த‌ற்போது ம‌ண்ணில் புதைந்து கொண்டிருக்கிறது.

ஜெயபிரகாஷ்: நகராட்சிக்கு சொந்தமான டம்பர் பிளேசரை பயன்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் 25 லட்சம் ரூபாய் செலவில் டம்பர் பிளேசர் வாங்க நிதி ஒதுக்கிய மர்மம் என்ன?.

அரூஸியா பேகம்: குப்பை அள்ளச் சொன்னதற்காக போலீசில்,பொய்யான புகார் அளித்து எனது கணவரை சிறையில் அடைத்த துப்புரவு மேற்பார்வையாளர் மனோகரனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தலைவர்:  துப்புரவு மேற்பார்வையாளர் மனோகரனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

மேஸ்திரி ம‌னோக‌ர‌ன் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ கூறி 15 க‌வுன்சில‌ர்க‌ள் கையெழுத்திட்ட‌ ம‌னுவை ந‌க‌ராட்சி த‌லைவ‌ரிட‌ம் ம‌னுவாக‌ கொடுத்த‌ பெற்று கொண்ட‌ த‌லைவ‌ர் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் என்றார்.

மேலும் ந‌க‌ராட்சி குப்பை கிட‌ங்குக்கு செல்லும் வ‌ழியில் வேக‌த்த‌டை ம‌ற்றும் இத‌ர‌ ப‌ணிக‌ளுக்கு  ரூ80 ஆயிர‌ம் தீர்மான‌த்தில் வைக்க‌ப்ப‌ட்ட‌து இதை க‌வுன்சில‌ர் ஜெய‌பிர‌காஷ் க‌டுமையாக‌ எதிர்த்த‌தால் த‌லைவ‌ர் அத்தீர்மான‌த்தை ர‌த்து செய்தார்.
 

1 comment:

  1. எங்கே எங்க மங்காத்தாவின் தங்கச்சி மகனுடைய commentsஐ காணோம்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.