Wednesday, November 21, 2012

கீழ‌க்க‌ரையில் க‌ர‌ண்ட் வ‌ந்தாலும் பிர‌ச்ச‌னை!மின்சாத‌ன‌ பொருட்க‌ள் சேத‌ம்!


கிழ‌க்க‌ரையில் நாளென்றுக்கு 16 ம‌ணி நேர‌ம் மின்சார‌ம் துண்டிக்கப்ப‌டுகிற‌து. 8 ம‌ணி நேர‌ம் ம‌ட்டும்தான் மின்சார‌ம் மின்சாரம் விநியோகிக்க‌ப்ப‌டுகிற‌து. இந்நிலையில்  கீழக்கரை தட்டாந்தோப்பில் நேற்றிரவு, உயர் அழுத்த மின்சாரத்தால் பல வீடுகளில் மின் விளக்குகள் வெடித்தன. மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன.

இது குறித்து ந‌யினார் என்ப‌வ‌ர் கூறுகையில்,ஏற்கென‌வே ப‌ல‌ ம‌ணி நேர‌ம் மின் வெட்டால் அவ‌திப்ப‌ட்டு வ‌ருகிறோம் அப்ப‌டியே மின்சார‌ம் வ‌ந்தாலும் அடிக்க‌டி இதுபோன்று உய‌ர் அழுத்த‌ மின்சார‌ம் வருவ‌தால் மின்சாத‌ன‌ பொருட்க‌ள் சேத‌ம‌டைகின்ற‌ன‌.என்ன‌ சொல்வ‌தென்றே தெரிய‌வில்லை என்றார்.

உதவி மின்பொறியாளர் பால்ராஜ் கூறுகையில், "" மின் லைனில், "நியூட்ரல்' துண்டிக்கப்பட்டு, உயர் அழுத்தம் மின்சாரம் சப்ளையானது. தற்போது சரி செய்யப்பட்டு விட்டது,'' என்றார்.



 

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்November 21, 2012 at 7:38 PM

    காரணம் தெரிந்து விட்டது.. பொது மக்களுக்கு ஏற்பட்ட பொருள் நஷ்டத்தை ஈடு செய்வது யார்?

    அந்தந்த காலக் கட்டங்களில் நியூட்ரல் மற்றும் மெயின் லைன்களை முறையாக பராமரித்து கண்காணித்திருந்தால் இது போன்று ஏற்பட வாய்ப்புண்டா?

    தமிழக அரசு நிர்வாகத்திலேயே கேடு கெட்ட துறை ஒன்று உண்டு என்றால் அது நிச்சயமாக மின் துறையே!!! அதிகாரிகளின் தரங் கெட்ட நிர்வாக சீர்கேட்டால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட, நிர்வாகச் சீர்கேட்டை ஒழுங்கு செய்யாமல் மின் கட்டண உயர்வு என்ற பேரில் மக்கள் தலையில் சுமத்தினாரகள். மாக்களாகிய (?) நாமும் ஏற்று கொண்டு விட்டோம்..
    வேறு வழி??

    சமீபத்தில் ஆழியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் பொறியாளர் (மன்மத ராஜா)ஒருவரால் நடத்தப்பட்ட காம லீலைகள் ஊறரிந்த வெட்ட வெளிச்சம். இவனைப் போன்ற கருப்பு ஆடுகள் நிர்வாகத்தில் இருந்தால் எப்படி விளங்கும்??

    எழுத எவ்வளவோ இருக்கிறது.. ஆனால் மின் துண்டிப்பு, யுபிஎஸ் இறக்கம்.. மின் துறையை நினைத்த மாத்திரத்திலேயே நெஞ்சு கொதிக்கிறது. இது ஜனநாயாக நாடு, பொறு பொறு என அலறுகிறது உள்ளங்கள்..

    கடந்த ஆட்சி இதே காரணத்திற்காக ப்றி போனது. எதிர் வரும் நாடாளூமன்ற தேர்தலில் நாற்பதும் நமக்கே என்று மார் தட்டுகின்றனர் சிலர்.. நாறபதில் நான்கா அல்லது பூஜ்யமா எனபதை காலந்தான் பதில் சொல்லும்..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.