Tuesday, November 27, 2012

பொள்ளாச்சி போலி ம‌ந்திர‌வாதியை குண்ட‌ர் த‌டுப்பு ச‌ட்ட‌த்தில் அடைக்க‌ வ‌லியுறுத்த‌ல்!



மேலுள்ள‌ ப‌ட‌ங்க‌ள்:‍‍கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ பொள்ளாச்சி இப்ராகிம்
 
பெண்க‌ளிட‌ம் ஆபாச‌மாக‌ பேசுத‌ல், ஏமாற்றுத‌ல் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு குற்ற‌சாட்டுக‌ளை தொட‌ர்ந்து தமிழ்நாடு த‌‌வ்ஹீத் ஜ‌மாத் சார்பில் காவ‌ல்துறையில் கொடுத்த‌ புகாரில் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ போலி ம‌ந்திர‌வாதி பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டைச் சேர்ந்த அப்துல் ஜபார் என்பவரது மகன் முகமது இப்ராஹிம் (40) ஜாமீன் பெற்று விடுத‌லையாவ‌த‌ற்கு முய‌ற்சிக‌ளை தொட‌ர்ந்து வ‌ருவ‌தாக‌  செய்திக‌ள் வெளியாகியுள்ள‌து.மேலும் ஆன்மீக‌த்தின் பெய‌ரில் ப‌ல்வேறு ஆபாச‌ங்க‌ளிலும், மோச‌டிக‌ளிலும் ஈடுப‌ட்டதாக‌ கூற‌ப்ப‌டும் இவ‌ரை குண்ட‌ர் த‌டுப்பு ச‌ட்ட‌த்தின் கீழ் கைது செய்ய‌ வேண்டும் என‌ ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ரும் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து இந்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாத் வ‌ளைகுடா பொறுப்பாள‌ர் கீழை ஜ‌மீல் கூறிய‌தாவ‌து,
இஸ்லாமிய மார்க்க‌த்திற்கு விரோத‌மாக‌ செய்வினை,சூனிய‌ம், என்ற‌ பெய‌ரிலும் ,ஆன்மீக‌ ம‌ருத்துவ‌ம் என்ற‌ பெய‌ரில் பெண்க‌ளிடம் ஆபாச‌மாக‌ பேசிய‌து,பொது ம‌க்க‌ளை ஏமாற்றிய‌து உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ச‌ட்ட‌ விரோத‌ செய‌ல்க‌ளை செய்த‌தாக‌ கூற‌ப்ப‌டும் இவ‌ரை ஜாமீனில் வெளி வ‌ர‌ விடாம‌ல் அர‌சாங்க‌ம் த‌டுக்க‌ வேண்டும்.மேலும்  இவ‌ரை ஜாமீன் பெற‌ முடியாத‌ வ‌கையில் குண்ட‌ர் த‌டுப்பு ச‌ட்ட‌த்தின் கீழ் நட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.







                              
   ச‌மூக ஆர்வ‌ல‌ர் முஜீப் கூறுகையில்,

இவ‌ரின் ஜாமீன் ம‌னு 3 முறை நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ கேள்விப‌ட்டேன்.இவ‌ர் ஜாமீனில் வெளியே வ‌ந்தால் இன்னும் ப‌ல‌ அக்கிர‌ம‌ங்க‌ளை செய்வார் பொதும‌க்க‌ள் ம‌த்தியில் கொந்த‌ளிப்பு ஏற்ப‌டும்.ந‌‌ல்ல‌வ‌ர் போல் ந‌டித்து மிக‌ வ‌க்கிர‌மாக‌ செய‌ல்பட்ட‌ இவ‌ரை குண்ட‌ர் த‌டுப்பு ச‌ட்ட‌த்தில் அடைக்க‌ மாவ‌ட்ட‌ நிர்வாக‌ம் நட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

 

1 comment:

  1. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் உருவாகத்தான் செய்வார்கள். ஏமாந்தவர்களிடம் மார்க்கம் இல்லை என்பது தான் உண்மை அவர்களுக்கு மார்க்கத்தை எத்திவைக்க முயலுங்கள்........

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.