Sunday, November 18, 2012

பெரும் சுகாதார‌கேட்டில் பேருந்து நிலைய‌ம்!க‌வுன்சில‌ர்க‌ள் குற்ற‌ச்சாட்டு!




கீழ‌க்க‌ரை பேருந்து நிலைய‌த்திற்கு நாளொன்றுக்கு ஏராள‌மான‌ ம‌க்க‌ள் வ‌ந்து செல்கின்றன‌ர்.ஆனால் பேருந்து நிலையத்தின் ஒரு புற‌ம் குப்பைக‌ள் நிறைந்தும்,ம‌றுபுற‌ம் க‌ழிவுநீர் தேங்கிய‌ நிலையில் பெரும் அசுத்த‌மாக‌ உள்ள‌து.இத‌னால் ம‌லேரியா உள்ளிட்ட‌ நோய்க‌ள் ப‌ர‌வும் வாய்ப்புள்ள‌தாக‌வும் என‌வே உட‌ன‌டி நட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.
மேலும் கீழ‌க்க‌ரையில் ப‌ல‌விதமான‌ ம‌ர்ம‌ காய்ச்ச‌ல் ப‌ர‌வி கொண்டிருக்கிற‌து.இதுவ‌ரை குப்பைக‌ள் கொட்டுவ‌த‌ற்கு இட‌மில்லை என்று கூறி வ‌ந்த‌ன‌ர்.ஆனால் த‌ற்போது கீழ‌க்க‌ரைக்கென்று த‌னியாக‌ குப்பை போடுவத‌ற்கு உர‌க்கிட‌ங்கு கோடிக்கு மேல் செல‌வு செய்து த‌யாராக‌ உள்ள‌து.ஆனால் துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ளை க‌ண்காணிக்க‌ வேண்டிய‌ மேஸ்திரிக‌ள் ச‌ரியான‌ முறையில் க‌ண்காணிக்காத‌தால் சாலைக‌ளில் குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌டாம‌ல் குவிந்து கிட‌க்கின்ற‌ன‌.என‌ க‌வுன்சில‌ர்க‌ள் குற்ற‌ஞ்சாட்டுகின்ற‌ன‌ர்.ப‌ஸ் நிலையம் 5 ம‌ற்றும் 6வ‌து வார்டு ப‌குதி உட்ப‌ட்ட‌து.


இது குறித்து க‌வுன்சில‌ர்க‌ள் 6வ‌து வார்டு த‌ங்க‌ராஜ் ம‌ற்றும் 5வ‌து வார்டு சாகுல் ஹ‌மீது ஆகியோர் மேலும் கூறுகையில்,

எங்க‌ள‌து வார்டு ப‌குதியில் துப்புர‌வு ப‌ணி ச‌ரியாக‌ ந‌டைபெறுவ‌தில்லை.இத‌னால் இப்ப‌குதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ள‌து.மேலும் சில‌ தின‌ங்க‌ளுக்கு முன் அன்பு ந‌க‌ரில் ம‌ர்ம‌ காய்ச்சலுக்கு சிறுவ‌ன் ப‌லியானான். 20வ‌து வாலிப‌ர் ஒருவ‌ரும் காய்ச்ச‌லில் ப‌லிய‌னார்.இந்நிலையில் ப‌ஸ் ஸ்டாண்ட் இப்ப‌டி சுகாதார‌ கேடாக‌ இருப்ப‌தால் என்னென்ன‌ நோய்க‌ள் வ‌ர‌ போகிற‌து என்று தெரிய‌வில்லை.ப‌ஸ் ஸ்டாண்டுக்கு நுழையும் வ‌ழியில் குப்பைக‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ அக‌ற்ற‌ப்ப‌டாம‌ல் உள்ள‌து.மேலும் க‌ழிவு நீர் தேங்கி நின்று நோய் கிருமிக‌ள் ப‌ர‌வுகிற‌து.வேக‌மாக‌ ந‌ட‌வ‌டிக்க‌ எடுக்க‌ வேண்டிய‌ இந்த ச‌ம‌ய‌த்தில் துப்புர‌வு ப‌ணிக‌ளில் தொய்வு ஏற்ப‌ட்டுள்ள‌து.உயிர்க‌ள் ப‌லியாவ‌த‌ற்கு முன் உட‌ன‌டி ந‌ட‌வடிக்கை வேண்டும் என்ற‌ன‌ர்.

2 comments:

  1. kilakarai develop aaga innu 1400 years aagum,,

    ReplyDelete
  2. கீழ‌க்க‌ரை முலுவதும் இப்டித்தான் இருக்குது ... go and see http://www.facebook.com/KilakaraiPicture?ref=hl

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.