பைல்(பழைய) படம்:
நகராட்சி கூட்டம் கூட்டி டீ மட்டும்தான் குடிக்கிறோம். தீர்மானம் நிறைவேற்றி எந்த பணிகளும் நடப்பதில்லை என கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் ராவியத்துல் காதரியா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஹாஜாமுகைதீன், தலைமை எழுத்தாளர் நாகநாதன், சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
நகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் ஒரு பகுதி...
20வது வார்டு கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா :
புதிய பஸ் ஸ்டாண்டில் மின் கட்டண சேவை மைய பணி முடிந்தும், மின் வாரியத்திடம் ஓப்படைக்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.மேலும் மின் தடை நேரத்தை மக்களுக்கு மின் இலாக தெரியபடுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற பட வேண்டும்.டெங்கு,மலேரியாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் அனைத்தும் மினிட் புத்தகத்தில் ஏற்றப்பட்டதா?
தலைவர் ராவியத்துல்கதரியா: ஒரு தீர்மானம் மட்டும் ஏற்றப்படவில்லை.
கவுன்சிலர்: ஏன் ஏற்றப்படவில்லை அப்படி என்றால் தீர்மானத்தை நிறைவேற்றிய மக்கள் பிரதிநிதிகள் முட்டாள்களா?
தலைவர்: உடனே ஏற்றுகிறேன் என்று சென்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படு விடுபட்ட தீர்மானத்தை மினிட் புத்தகத்தில் பதிவு செய்தார்.
21வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரகாஷ்:
டெங்கு காய்ச்சலில் நகைகளை அடகு வைத்து ஏழைகள் சிகிச்சை பெறுகின்றனர். நகராட்சி நிர்வாகம் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.கடந்த ஆறு வருடங்களுக்கு முன் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நியாயவிலை மண்ணெண்ணெய் கடை நடத்துவதற்கு கட்டடம் கட்டி கொடுத்துள்ளீர்கள் அதற்கு இன்று வரை ஏன் வாடகை வாங்கவில்லை.
தலைமை எழுத்தாளர் நாகநாதன்: இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இபுராகிம்:
சென்ற கூட்டத்தில் டிம்பர்பிளாசர் வண்டி தேவை இல்லை என்று கூறியும் டெண்டர் விட்டுள்ளீர்கள்.மேலும் ஏற்கெனவே வாங்கப்பட்ட ஓடாத டம்பர் பிளேசர் வாகனத்திற்கு எட்டு மாதத்திற்கு 1300 லிட்டர் டீசல் செலவிட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. தலைவர் சொந்த வாகனத்திற்கு போட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கான பணத்தை, வசூலிக்க வேண்டும்.
சுகாதார ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி: வளர்ந்து வரும் நகராட்சி என்பதால் குப்பைகளை அகற்றுவதற்கு வண்டி தேவைப்படுகிறது.
14வது வார்டு கவுன்சிலர் தாஜூன்அலிமா:
மாதந்தோறும் கூட்டம் நடத்தி டீ மட்டும் குடித்துவிட்டு செல்கிறோம். அதோடு சரி. நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதற்கும் பணி நடைபெறுவதில்லை.ஓராண்டாக முறையிட்டாலும், பிரச்னைகள் தீர்க்கப்படுவதில்லை.
11வது வார்டு கவுன்சிலர் மீராபானு:
எனது வார்டு பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடப்பதால் நோய்பரவும் ஆபத்து நிலவுகிறது.
12 வது வார்டு கவுன்சிலர் சித்தீக் அலி : நகராட்சி பிறப்பு இறப்பு சான்றிதழ்களை உடனே வழங்க வேண்டும்
தலைவர் : அனைத்து பிரச்சனைகளும் கவனிக்கப்பட்டு தீர்க்கப்படும்.மேலும் தலைவர் கூறியதாவது கீழக்கரை பேருந்து நிலையத்தில் மக்கள் நலனை கருதி புறக்காவல் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்
மேலும் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.66 கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளுக்கான ஒப்பந்தம் கோர நகராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
முடங்கி கிடக்கும் அழகு காளை, முன்னல் நிர்வாகத்தால் வாஙகப்பட்ட டிம்பர் பிளாஷர்க்கு எட்டு மாதத்திற்கு 1300 லிட்டர் டீசல் வாங்கப்பட்டதாக செலவு கணக்கு ஜோடிக்கப்படுள்ளதாம்.. இதை நாங்கள் சொல்லவில்லை.. மக்கள் பிரதிநிதி ஒருவர் பகிரங்கமாக கூட்டத்தில் குற்றம் சாட்டுகிறார்.. இதற்கு தலவரிடமிருந்து பொறுப்பான பதில் இல்ல..( இந்த செய்தி இன்றைய தினமலர் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டு ஊரே காரி துப்புகிற்து..)தலவருக்கு வக்காலத்து வாங்கும் அடிப்பொடிகள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
ReplyDeleteஇந்த லட்சணத்தில் சுகாதார ஆய்வாளர் திரு.திண்ணாயிர மூர்த்தி வளர்ந்து வரும் நகராட்சி பணிகளுக்கு ம்ற்றொரு டம்பர் பிளேஷ்ர் தேவையாம் என்று சப்பை கட்டு கட்டுகிறார், ஏற்கனவே உள்ள வாகனதிற்கே வேலை இல்லை..அந்ந்த் வாகந்த்திற்கான் வீதிகளும் நகரில் இல்லை.. குப்பைகளை அள்ள கூடுதல் துப்பரவு பணியாளர்களும் (நியமனம்) இல்லை.. அப்போ, கண்க்கு ஜோடிக்கவா?
மிகுந்த போராடத்திற்கு பின் நகராட்சிக்கு தனி ஆணையர் நியமிக்கப்பட்டார்.. வந்தவர் நல்லவ்ர், வல்லவர்,நீதிமான் என்றார்கள்..அப்படி தெரியவில்லையே? மக்களின் வரி பணமான அரசு நிதியை இப்படி போகிறதே? அவர் கவனிக்க மாட்டாரா? அது அவருடைய கட்டாய பணி இல்லையா?அவர் நியமிக்கப் பட்டதன் நோக்கம் என்ன?
என்னமோ நடக்குது. மர்மமாக இருக்கிறது. ஒன்றுமே புரியலே இந்த நகராட்சியின் அலங்கோல நிலமை, இறைவனே..
பொது மக்கள் நலத் திட்டங்களுக்குக்காக அறிவிக்கப்பட்ட வாறுகால் மூடி என்னவாயிற்று.. மின் கட்டண பண வசூல் மையம் என்னவாயிற்று?ஹைமாஸ் விளக்குகள் அமைக்கும் பணி என்னவாயிற்று? நகராட்சியில் போதிய அளவு நிதி ஆதாரம் உள்ளது.. அப்படி இருந்தும்.....?
Tea kudika maddum Nagaradg meeting illaga, ponda ,vada kuda sapitathan, vetti pechi pesuvatharkkumthan,
ReplyDelete