Saturday, September 15, 2012

தேசிய‌ அடையாள‌ அட்டை ம‌றுப்பு க‌ண்டித்து கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி முற்றுகை!தீர்வு காண‌ மாவ‌ட்ட‌ நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை!






கீழக்கரையில் தேசிய அடையாள அட்டை வழங்கும் பட்டியலில் ப‌ன்னாட்டார் தெரு உள்ள மீன‌வ‌ர்க‌ள் அதிக‌ம் பேர் வாழும் ஒரு பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ள‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து‌. தேசிய அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சென்றுள்ளனர். 13வ‌து வார்டுக்கு உட்ப‌ட்ட‌ ப‌குதியை சேர்ந்த‌ இவ‌ர்க‌ளில் 105க்கும் மேற்ப‌ட்ட‌ குடும்ப‌ங்க‌ளில் 500க்கும் மேர்ப‌ட்டோரை ம‌க்க‌ள் தொகை க‌ண‌க்கெடுப்பில் சேர்க்க‌வில்லை இதனால் தேசிய‌ அடையாள‌ அட்டைக்கான‌ பெய‌ர் ப‌ட்டிய‌லில் இவ‌ர்க‌ள் பெய‌ர் விடுப‌ட்டுள்ள‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

பட்டியலில் தங்களின் பெயர்கள் இல்லாததை அறிந்து ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட‌ அப்ப‌குதியின‌ர் இன்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்ட‌து.

13வ‌து வார்டு க‌வுன்சில‌ர் ர‌பியுதீன் த‌லைமையில் முற்றுகையிட்ட‌ இவ‌ர்க‌ள் ந‌க‌ராட்சி தலைவ‌ர் ம‌ற்றும் க‌மிஷ‌ன‌ரிட‌ம் இது ம‌னு கொடுத்த‌ன‌ர்.க‌மிஷ‌ன‌ர் முக‌ம்ம‌து மைதீன் உட‌ன‌டியாக‌ ராம‌நாத‌புர‌ம் தாசில்தாருக்கு த‌க‌வ‌ல் கொடுத்தார்.இதை தொட‌ர்ந்து ஆர் ஐ செல்வ‌ராஜ் ம‌ற்றும் அதிகாரிக‌ள் உட‌ன‌டியாக‌ அப்ப‌குதியில் க‌ண‌க்கெடுப்பை துவ‌க்குவதாக‌ கூறி இத‌ற்கான‌ ப‌டிவ‌ங்க‌ளை எடுத்து வ‌ந்து இத‌ற்கான‌ ஏற்பாடுகளை செய்த‌ர்க‌ள்.இதை தொட‌ர்ந்து முற்றுகை கைவிட‌ப்ப‌ட்டு க‌லைந்து சென்ற‌ன‌ர்.


2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 15, 2012 at 7:20 PM

    பெண்னாட்டார் தெரு பொது மக்களின் எழுச்சிக்கு வித்திட்டு உடனடி தீர்வு கணட 13-ம் வார்டு மக்கள் பிரதிநிதி சகோதரர் ரபியுதீன் எவ்வளவு பாராட்டினாலும் ஈடு செய்ய முடியாது.. இது போல மற்ற வார்டுகளிலும் அதன் மக்கள் பிரதிநிதிகள் செயல் படுவார்கள் என ஆவல் கொள்வதில் தவறு இல்லை என எண்ணுகிறோம்..

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 17, 2012 at 8:11 PM

    இது விஷயத்தில் துரித நடவடக்கை எடுத்து பிரச்சனைக்கு தீர்வு கண்ட நகராட்சி ஆணையர் அவர்களுக்கு ஒரு “ ஓ’’ போட்டே ஆக வேண்டும். தொடரட்டும் தங்களின் சீரிய பணி..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.