Tuesday, October 1, 2013

கீழக்கரை நகராட்சிக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பில் எச்சரிக்கை!

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக பொருளாளரும்,சமூக ஆர்வலருமான சாலிஹ் ஹுசைன் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

கீழக்கரை நகராட்சிக்கு மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் நிதிகள் குறித்தோ, நகராட்சியில் நடை பெற்று வந்த மக்கள் நலப் பணிகள் குறித்தோ, அதிகாரத்தில் இருந்து வந்தவர்கள் அடித்து வந்த கொள்ளைகள் குறித்தோ, மக்கள் வரிப் பணம் தவறான வழியில் வீணடிக்கப்படுவது சம்பந்தமாகவோ, கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை  எவ்வித தகவலும் பொது மக்களுக்கு தெரியாமலே இருந்து வந்தது. 


தகவல் அறியும் உரிமை சட்டம் நடை முறைக்கு வந்த பின்னர் பொது நல விரும்பிகளும், சமூக ஆர்வலர்களும், கீழக்கரை நகாராட்சி நிர்வாகத்தின் உண்மையான செயல்பாடுகளை அறியும் நோக்கோடு, இந்த சட்டத்தின் வாயிலாக பல்வேறு ஆக்கப்பூர்வமாக கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக, கீழக்கரை நகராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எவ்வித பதிலும் அளிக்கப்படாமல், மனுதாரர் (கீழை இளையவன்) மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

இதனையடுத்து, கடந்த இரண்டாண்டு காலமாக, உரிய பதில் தராமல் அலைக்கழிப்பு செய்து வரும் கீழக்கரை நகராட்சியின் பொது தகவல் அலுவலரிடம் இருந்து இழப்பீடு பெற்று தரும் படி மாநில தகவல் ஆணையத்திற்கு, மனுதாரரால் புகார் செய்யப்பட்டது. அதனை ஏற்ற மாநில தகவல் ஆணையம், கீழக்கரை நகராட்சி மனுதாரருக்கு உடனடியாக பதில் அளிக்க கடந்த 22.07.2012 அன்று ஆணை பிறப்பித்தது. 

ஆணை அதன் பின்னரும் பதில் கிடைக்காததால், மீண்டும் மனுதாரரால் மாநில தகவல் ஆணையத்திற்கு புகார் செய்யப்பட்டது. அதனை பரிசீலித்த ஆணையம், சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி, கடந்த 13.09.2013 அன்று சென்னையில் உள்ள தமிழ் நாடு தகவல் ஆணையத்தில்  விசாரணை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சம்மன் (அழைப்பாணை)தீர்ப்பு அதில் கீழக்கரை நகராட்சி, மனுதாரருக்கு உரிய முறையில் பதில் அனுப்ப தவறியமைக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 06.08.203 அன்று மனுதாரருக்கு கீழக்கரை நகராட்சி தகவல் அனுப்பியுள்ளதை ஆணையம் ஏற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தீர்ப்பின் சாரத்தில் திருப்தியுறாத மனுதாரர் (கீழை இளையவன்) சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 23 இன் படி இவ்வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டியும், மேல் முறையீட்டிற்கான சிறப்பு அனுமதி வேண்டியும் மாநில தகவல் ஆணையத்திற்கு மனு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக பொருளாளரும்,சமூக ஆர்வலருமான சாலிஹ் ஹுசைன் கூறியதாவது,


தகவல் உரிமை ஆணையம் என்பது மிகவும் பயனுள்ள அமைப்பு நாம் ஒவ்வொருவரும் இதை பயன் படுத்தி நமது உரிமைகளை பெற வேண்டும் கீழக்கரை நகராட்சி தொடர்பாக தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் சில விளக்கங்களை கேட்டிருந்தேன் ஆனால் நகராட்சியோ ஆண்டுக்கு மேல் தகவல்களை தராமல் இழுத்தடித்தது பிறகு தகவல் ஆணையம் மூலம் கீழக்கரை நகராட்சிக்கு சம்மன் அனுப்பபட்டு நகராட்சி சார்பில் அலுவலர்கள் ஆஜரானார்கள்  தற்போது தகவல் ஆணையம் எச்சரிக்கையின் விடுத்த பின் தற்போது தகவல் தரப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை வரை சென்று மிகுந்த அலைச்சலுக்கு உள்ளானேன் எனவே தாமதப்படுத்தியதற்கு எச்சரிக்கை மட்டும் போதாது.சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே இவ்வழக்கில் மேல் முறையீடு செய்ய உள்ளேன்.

மக்களை அலைய வைக்கும் அனைவருக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்.தகவல் ஆணையம் மூலம் நமது உரிமைகளை தகவல்களாக பெற யாரேனும் விரும்பினார்ல் அதற்குண்டான வழிமுறைகளை காட்டி தர தயராக உள்ளேன் .எனது தொலைபேசி எண் 0091 9791742074  என்றார்

4 comments:

 1. இந்த விழிப்புணர்வு செய்தியை பகிர்ந்த, கீழக்கரை டைம்ஸ் குழு நண்பர்களுக்கு என் ஆத்மார்த்த நன்றிகள்.

  "ஏன்....? என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை." ஆக கேள்வி கேட்பது நம் உரிமை மட்டுமல்ல. நம் கடமையும் கூட. நம் இந்த தேசத்தில் கேள்வி கேட்காமல் ஏதும் எளிதில் கிடைப்பதுமில்லை. சுலபமாக நடப்பதுமில்லை என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. அதற்கு கீழக்கரை நகராட்சி மட்டும் என்ன விதி விலக்கா..?

  கீழக்கரை பகுதி நண்பர்கள் அனைவரும், நம் நகரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அரசு அலுவலகங்கள் அத்தனையிலும், நல்ல பல ஆக்கப்பூர்வமான கேள்விகளை தகவல் அறியும் உரிமைகள் சட்டத்தின் வாயிலாக கேட்டுப் பெற முன் வர வேண்டும். இவற்றை நாம் நீதிமன்றத்தில் ஆவணமாக பயன் படுத்திட இயலும் எனபது கூடுதல் தகவல்.

  கீழக்கரை நண்பர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் மற்றும் கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இந்த சட்டம் குறித்த இலவச கையேடும் விரைவில் வெளியிட இருக்கிறோம்.

  தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த சந்தேகங்களுக்கு 97917 42074 என்கிற என் அலைப் பேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம் .

  அன்புடன்
  கீழை இளையவன்

  ReplyDelete
 2. கீழக்கரை அலி பாட்சாOctober 1, 2013 at 11:24 PM

  சபாஷ்.அபாரம்.சக இணைய தள சகோதரர் கீழை இளையவன் சாலிஹ் ஹுசைனின் செய்தியை தங்களின் வளை தளத்தில் பகிர்ந்த உங்கள் பெருந்தன்மையை பராட்டுவது காலத்தின் கட்டாயம். அதை செய்யத் தவறினால் காலத்தின் கோலம். நீங்கள் இருவரும் கீழக்கரை நக்ரின் மேன்மைக்காக,சிறப்புக்காக பாடுபடுவது மனமார்ந்த பாராட்டுக்குரியது. இப் பணி அயர்வு இல்லாது தொடர நலவாழ்த்துகள். இறைவ்னின் நற் கூலிக்கு இரு கரம் ஏந்தி பிரார்த்திகின்றேன்.ஆமீன்.

  ReplyDelete
 3. சட்டம் ரீதியாக சரியான நடவடிக்கை எடுத்துள்ளார் திரு .AMD முஹம்மத் சாலிஹு ஹுசைன் ,அவர்களின் அறிவு திறமையும் , தைரியத்தையும் , பாராடிகொள்கிறேன்,இது போன்று பொது மக்களை உதாசீனம் படுத்தும் அரசு உழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க மக்கள் முன் வர வேண்டும் ,ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அணைத்து மக்களிடமும் லஞ்சம் கேட்டு மிரட்டும் அரசு உழியர்களின் மீதும் சட்டம் ரீதியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ,
  இது போன்று, புதிய குடும்ப அட்டைக்காக மனு கொடுத்து பல வருடம் ஆகியும் குடும்ப அட்டை கிடைக்காத பொது மக்கள் இது போன்ற தகவல் அறியும் சட்டத்தின் மூலம் புகார் தெரிவித்து குடும்ப அட்டைனை பெற்றுக்கொள்ளலாம் ,

  ReplyDelete
 4. இதற்காக சென்னை வரை சென்று மிகுந்த அலைச்சலுக்கு உள்ளா ஆக்கிய அரசு ஊழியர்களை சும்மா விட கூடாது, எனவே தாமதப்படுத்தியதற்கு அவர்களுக்கு எச்சரிக்கை மட்டும் போதாது.சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே இவ்வழக்கில் மேல் முறையீடு தயவு செய்து செய்ய வேண்டும் ,அப்பொழுது தான் சமந்த பட்ட ஊழியர்க்கும் மற்ற ஊழியர்க்கும் நல்ல படிப்பினையாக இருக்கும், சமந்த பட்ட ஊழியர் மீது நீதி மன்றம் மூலம் நஷ்டம் ஈடு பெற வேண்டும் ,இவ்வளவு தூரம் நீங்கள் கஷ்டம் பட்டத்திற்கான முழு வெற்றின் பயன் கிடைக்கும் ,
  மக்களை அலைய வைக்கும் அனைவருக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்.தகவல் ஆணையம் மூலம் நமது உரிமைகளை தகவல்களாக பெற யாரேனும் விரும்பினார்ல் அதற்குண்டான வழிமுறைகளை காட்டி தர தயராக உள்ளேன் என்று நீங்கள் கூறி உள்ளது மிகவும் பாராடகூரியது , உங்களுக்கு எனது நன்றிம் , நமது ஊர் மக்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ,
  இது போன்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும் நல்ல பாடம் கற்பிற்க வேண்டும் , நமது ஊர் மக்கள் புதிய ரேஷன் கார்ட்க்கு (குடும்ப அட்டை ) மனு கொடுத்து பல வருடங்கள் காத்து கிடக்கிறர்கள் எந்த ஒரு பதிலும் இல்லாமல் ,இவர்களுக்கு தக்க வழிகாட்டுதல்களை நீங்கள் கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் உதவிய இருக்கும் , உங்களுக்கும் மிக நன்மையாகவும் இருக்கும் ,

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.