Saturday, June 8, 2013

ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து !பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கீழக்கரையில் இலங்கை தூதரக அதிகாரி தகவல்!


கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் கல்விக்கான உதவி வழங்கும் விழா முஸ்தபா மரைக்காயர் தோட்டத்தில் ந்டைபெற்றது.
அப்துல் ரசீது ஆலிம் கிராத் ஓதி விழாவை துவங்கி வைத்தார்.மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் தலைமை வகித்தார்.முஹம்மது சதக் அறக்கட்டளை செயலாளர் யூசுப் சாஹிப்,இலங்கை துணை தூதரக தலைவர் அமீர் அஜ்வாத், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான்,கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா,ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் காத்த்லிங்கன்,முஹம்மது சதக் பாடெக்னிக் முதல்வர் அலாவுதீன் முன்னிலை வகித்தனர்.ராமநாதபுர மாவட்ட காஜி அலாஹுதீன் வரவேற்றார்.

இலங்கை தூதரக துணை அதிகாரி பேசியதாவது,

ராமேவரம்  - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து துவங்க இருநாட்டு அரசுகளும் முடிவு செய்துள்ளது.இதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அது போன்று இலங்கை திரிகோணமலையில் அமெரிக்கா படைத்தளம் அமைக்க அனுமதி கோரியது.இந்தியா எதிப்பு தெரிவித்ததால் அனுமதி அளிக்கப்படவில்லை.தமிழகத்திற்கு இலங்கைக்கும் பாரம்பரியமாக உறவு இருந்து வந்துள்ளது. என்றார்

நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு கல்விக்கான உதவிகள் வழங்கப்பட்டன.தமுமுக நிர்வாகி முஹம்ம்து சிராஜ்தீன்,ஹமீதியா தலைமை ஆசிரியர் ஹான் இப்ராஹிம்,ரிபாய் அகமது,ஒருங்கினைப்பாளர் கவுன்சிலர் முகைதீன் இப்ராஹிம் மற்றும் ஜமாத்தார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டன

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.